districts

சிட்டா வழங்குவதில் முறைகேடு கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, டிச.8 -  மயிலாடுதுறை அரு கேயுள்ள நெ.2 கடலங்குடி, திருச்சிற்றம்பலம் ஊராட்சி களில் பயிர் காப்பீட்டு பெற  சிட்டா அடங்கல் வழங்குவ தில் முறைகேடு செய்த கிராம நிர்வாக அலுவலரை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கட லங்குடி கடைவீதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில்  புதனன்று கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  கிளை செயலாளர் சுகு மாறன் தலைமை வகித்தார்.  கட்சியின் ஒன்றிய செயலா ளர் டி.ஜி.ரவி,  மூத்த தோழர் டி.கணேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.மேகநா தன், அறிவழகன், ஒன்றியக் குழு உறுப்பினர் அ.ராஜேஷ்  உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர்.  நெ-02 கடலங்குடி, திருச்சிற்றம்பலம் ஆகிய இரு  கிராமங்களின் கிராம நிர்வாக  அலுவலராக பணி செய்கிற  மதன்மோகன் என்பவர் சிட்டா  அடங்கல் வழங்குவதில் தொ டர்ந்து முறைகேடு செய்து வருகிறார். இதையடுத்து, மயிலாடுதுறை வட்டாட்சி யரிடம் பலமுறை நேரில் மனு  அளித்தும் எந்த நடவடிக்கை யும் இல்லாத நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.