ஈரோடு, பிப். 4- கல்வி, சுகாதாரம், பழங்குடியி னர் நலன், எதிர்க்கட்சி ஆளும் மாநி லங்கள் புறக்கணிப்பு, பொதுத் துறையை தனியாருக்கு தாரை வார்ப்பு, நூறுநாள் வேலைதிட்ட நிதி வெட்டு, விவசாயிகள் புறக் கணிப்பு என கார்ப்ரேட்டுகளின் நலனை மனதில் வைத்து, இந்திய உழைப்பாளி மக்களின் நலனை புறக்கணித்து பாஜக தலைமையி லான ஒன்றிய அரசு தாக்கல் செய்த 2025 பட்ஜெட்டை கண்டித்து, தமிழ் நாடு முழுவதும் செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதன்ஒருபகுதியாக, ஈரோடு மாவட்டம், கடம்பூர் பேருந்து நிலைய வளாகம் அருகே மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, மலை வட்டாரக்கமிட்டி உறுப்பினர் தங்கவேல் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் சி.துரைசாமி, கே.மாரப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் தயாலம்மாள், இடைக் கமிட்டிச் செயலாளர் சி.சின்னசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற் றனர். பெருந்துறை பேருந்து நிலை யம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு தாலுகா கமிட்டி உறுப்பி னர் பி.முத்துபழனிசாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பி னர்கள் வி.ஏ.விஸ்வநாதன், த. நவீன் மற்றும் கே.குப்புசாமி உள் ளிட்டோர் உரையாற்றினர். ஈரோடு தாலுகா கமிட்டியின் சார்பில் நசிய னூரில் தாலுகாச் செயலாளர் என். பாலசுப்பிரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் பா.லலிதா ஆகியோர் கண்டன உரையாற்றினார். இதில் திரளானோர் பங்கேற்றனர். சூரம்பட்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிபிஎம் ஈரோடு நகரச் செயலா ளர் வி.பாண்டியன் தலைமை வகித் தார். இதில், மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மூத்த தோழர் ப. மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சுந்தரராஜன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். நிறைவாக நகர கமிட்டி உறுப்பி னர் எஸ்.ரவி நன்றி கூறினார். கோபி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தாலுகா செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வி. மாரிமுத்து, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனு சாமி, முன்னாள் மாவட்டச் செயலா ளர் எஸ்.முத்துச்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை யாற்றினர். இதில், ததீஒமு செயலா ளர் கே.சி.ரங்கசாமி, தாலுகா பொரு ளாளர் கிருஷ்ணவேணி, விசதொ வி.ஆர்.மாணிக்கம், கே.ஆர்.வேலுச்சாமி, பி.தனசிங், எம்.குண சேகரன், துரைசாமி ஆர்.சோமசுந்தி ரம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற் றனர்.
கோவை
கோவை டாடாபாத், பவர் ஹவுஸ் அருகில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் என்.ஆறுச்சாமி தலைமை வகித்தார். இதில், மாவட் டச் செயலாளர், சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் கே.அஜய் குமார், வி.சுரேஷ், என். ஆர்.முருகேசன், ஆர்.கோபால், வி.தெய்வேந்திரன், வி. ராமமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் டி.சுதா, என்.ஜாகீர் உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற்ற னர். இதேபோன்று, மேட்டுப் பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, தாலுகா செயலா ளர் கே.கனகராஜ் தலைமை ஏற்றார். இதில், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ் மற்றும் எஸ்.ராஜலட்சுமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். உதகை நீலகிரி மாவட்டம், உதகை ஏடி சித்திடல் எதிரில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உதகை தாலுகாச் செயலாளர் நவீன் சந்திரன் தலைமை வகித்தார். கட்சியின் மூத்த உறுப்பினர்கள் வி.மைக்கல் சி.கிருஷ்ணன் சி.சேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல். சங்கலிங்கம் நிறைவு உரையாற்றி னார். இதில், புட்டுசாமி, ஆர்.நாகரா ஜன், பி.ராமன், ஆர்.பழனிச்சாமி, ரவி சிம்பு, மூர்த்தி உட்பட ஏராள மானோர் பங்கேற்றனர். முடிவில், தாலுகா உறுப்பினர் டி.முகிலன் நன்றி கூறினார். இதேபோன்று, கூடலூர், தேவாலபஜாரில், பந்தலூர் இடைக மிட்டி சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, ஏரியா கமிட்டி செய லாளர் ரமேஷ் தலைமை ஏற்றார். இதில், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் இராசி ரவிக்கு மார், வர்கீஸ், மணிகண்டன் மற்றும் ஏரியா கமிட்டி உறுப்பினர்கள் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
சேலம்
ஒன்றிய அரசின் பட்ஜெட்டை சேலம் கோட்டை மைதானம், சங்ககிரியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், மாவட்ட அமைப்பாளருமான எஸ்.முத்துக் கண்ணன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம். குணசேகரன், விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். கே.சேகர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராம மூர்த்தி, சிபிஎம் கிழக்கு மாநகரச் செயலாளர் கே.பச்சமுத்து, மாவட்ட அமைப்புக்குழு உறுப்பி னர் ஆர்.வைரமணி, சங்ககிரி தாலுகா செயலாளர் ஏ.ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேட்டூர் - கொளத்தூர் இடைக் கமிட்டி சார்பில், இடைக்கமிட்டி செயலாளர் எஸ்.வசந்தி தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். சிபிஎம் சேலம் வடக்கு மாநகரக்குழு சார் பில், ஐந்து ரோடு பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு பட்ஜெட் நகல் கிழிப்பு போராட்டம், வடக்கு மாநகரச் செய லாளர் என்.பிரவீன் குமார் தலைமை யில் நடைபெற்றது. இதில் வடக்கு மாநகரக்குழு உறுப்பினர்கள் உட் பட பலர் கலந்து கொண்டனர். சேலம் மேற்கு மாநகரக்குழு சார் பில், சூரமங்கலம் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மேற்கு மாநக ரச் செயலாளர் பி.கணேசன் தலைமை வகித்தார். இதில், கட்சி அலுவலக செயலாளர் பி.சந்திரன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட் டச் செயலாளர் எம்.குணசேகரன், மாநகரக்குழு உறுப்பினர்கள் உட் பட பலர் கலந்து கொண்டனர். நங்க வள்ளி ஒன்றியக்குழு சார்பில், ஜல கண்டாபுரம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், ஒன்றியச் செயலாளர் ஆர்.கிருஷ்ணவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சிபிஎம் நகரச் செயலா ளர் ஆர்.ஜோதிபாசு தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் ஆர்.சிசு பாலன், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எம்.மாரிமுத்து, சி.நாகரா சன், ஒன்றியச் செயலாளர் கே. கோவிந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.எஸ்.ராமச்சந்தி ரன், என்.கந்தசாமி, கே.பூபதி, ஏ.ஜெயா கே.ஆர்.சக்கரவர்த்தி உட் பட பலர் கலந்து கொண்டனர். பாலக்கோட்டில் வட்டச் செயலா ளர் பி.காரல் மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து, வட்டக்குழு உறுப்பி னர்கள் பங்கேற்றனர். பென்னாக ரம் மேற்கு ஒன்றியத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஆ.ஜீவானந் தம் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சக்தி வேல், மாவட்டக்குழு உறுப்பினர் கள் ரவி, வளர்மதி ஆகியோர் பங் கேற்றனர். இன்டூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பகுதிச் செயலா ளர் சேகர், மாவட்டக்குழு உறுப்பி னர் ஆர்.சின்னசாமி ஆகியோர் பங் கேற்றனர். பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பகு திச் செயலாளர் சக்திவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவ நாதன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம், எலச்சி பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் சக்திவேல் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.தமிழ்மணி, சு. சுரேஷ், கிழக்கு ஒன்றியச் செயலா ளர் பி.தேவராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பழனியம்மாள், கவிதா, மூத்த தோழர்கள் சுந்தரம், பெரியசாமி, மோட்டார் சங்கத் தலைவர் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளிபாளை யம் நான்கு ரோடு பகுதியில் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் லட்சு மணன் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோ கன், மாவட்டக்குழு உறுப்பினர் படைவீடு பி.பெருமாள், விசைத் தறித் தொழிலாளர் சங்க செயலா ளர் முத்துக்குமார் ஆகியோர் பங் கேற்றனர். குமாரபாளையம், ஆனங்கூர் பிரிவு சாலையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, நகரச் செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் சக்தி வேல் ஆகியோர் கலந்து கொண்ட னர்.