districts

img

தரமில்லாத குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் கல்மந்தை காலனி மக்கள், சிபிஎம் குடியேறும் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.17 - திருச்சி தாராநல்லூர் கல்மந்தை காலனி  குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி கட்டிடத் தில் கட்டப்பட்ட வீடுகள் தரமற்றதாக உள்ளது.  அதை ஆய்வு செய்து உரிய விசாரணை நடத்த  வேண்டும்.  ஏற்கனவே குடியிருந்த பயனாளிகளுக்கு உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்  என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலைக்கோட்டை  பகுதி குழு தலைமையில் கல்மந்தை காலனி  குடியிருப்பு வாசிகள் வெள்ளியன்று குடிசை  மாற்று வாரிய அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பகுதி செயலாளர் ராமர்  தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி  மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஜெயபால், பகுதிக் குழு உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் பேசினர்.  தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், கட்டிடத்தின் உறுதி குறித்து ஆய்வு செய்து உரிய நடவ டிக்கை எடுக்கப்படும். முன்பு குடியிருந்த பய னாளிகளுக்கு வீடு வழங்கப்படும் என உறுதி யளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

;