திருச்சிராப்பள்ளி, ஜன.9 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட வெகுஜன வசூல் - நிதி யளிப்பு பேரவை கூட்டம் திங்களன்று நம்பர் 1 டோல்கேட் பகுதியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னதுரை, மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி ஆகி யோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், புற நகர் மாவட்டக் குழு சார்பில் 968 குழுக்கள் 80 ஆயிரம் வீடுகளில் சேகரித்த ரூ.16,79, 347ஐ, மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி யிடம் வழங்கினர். மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக்குழு செயலா ளர்கள், கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் கனகராஜ் வரவேற்றார். மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியச் செய லாளர் மனோகரன் நன்றி கூறினார்.