திருச்சிராப்பள்ளி, ஆக.27 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டம் மணப்பாறை வட்டக் குழு உறுப்பினர் மறைந்த தோழர் ஆ. இளமாறன் படத்திறப்பு அவரது இல்லத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மணப்பாறை வட்டச் செய லாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும் முன்னாள் மணப்பாறை வட்டச் செயலாளருமான ராஜகோபால் படத்தை திறந்து வைத்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் சிதம்பரம், வட்டக்குழு உறுப்பினர் சீனிவாசன் புகழஞ்சலி செலுத்தி னர். நிகழ்ச்சியில் வட்டக்குழு உறுப்பினர் கள், கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.