districts

img

உச்ச நீதிமன்றம் வரையறுத்த தினக் கூலியை வழங்கக் கோரி தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்

மன்னார்குடி, டிச.7 -  உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ரூ.600-ஐ குறைந்தபட்ச தினக் கூலியாக அளிக்க வேண்டும். தொழிலாளர் வருங்கால வைப்பு  நிதி (இபிஎஃப்) வருடாந்திர கணக்கு பட்டி யலை ஒவ்வொரு ஆண்டும் எல்லா தொழிலா ளர்களுக்கும் வழங்கிட வேண்டும். தேவை யான துப்புரவு கருவிகள் மற்றும் உபகர ணங்களை ஒவ்வொரு துப்புரவு தொழிலாளிக் கும் வழங்கிட வேண்டும். கொரோனா பெருந் தொற்று சமயத்தில் உயிர் நீத்த தொழிலா ளர்களுக்கு அரசு அறிவித்த ரூ.5 லட்சம் நிவாரண நீதி வழங்கப்பட வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி   தூய்மைப் பணியாளர்கள் செவ்வாய்க் கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையொட்டிய ஆர்ப்பாட்டம் மன்னார் குடி நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற் றது. ஒப்பந்த துப்புரவு பணியாளர் சங்க  தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.  சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி. ரெகுபதி முன்னிலை வகித்தார். மாவட்ட செய லாளர் முரளி, அரசு போக்குவரத்து ஊழியர்  சங்க பொதுச்செயலாளர் ஏ.கோவிந்தராஜ், சிபிஎம் நகர செயலாளர் ஜீ.தாயுமானவன், சிஐடியு இணைப்புச் சங்க தலைவர்கள் கோரிக்கைகளை ஆதரித்து உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் டி. ஜெகதீசன் உரையாற்றினார்.

;