சென்னை, ஜூன் 14 - தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெள்ளிக்கிழமை (ஜூன் 14), சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஐம்பெரும் விழா நடை பெற்றது. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சிப் பெற வைத்த அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டு- பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் 100 விழுக்காடு தேர்ச்சிப் பெற்ற மாண வர்களுக்கு பாராட்டு- தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு டிஏபி வழங்குவது- அரசுப் பள்ளி களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவக்கம்- விளையாட்டில் தேசிய அளவில் பதக்கம் வாங்கியவர் களுக்கு பாராட்டு என நடைபெற்ற இந்த ஐம்பெரும் விழாவில் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
எண்ணிலடங்காத் திட்டங்கள்
அப்போது, தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறை சார்பில் 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் “காலை உணவுத் திட்டம்”, 27 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் “இல்லம் தேடிக் கல்வி”, 28 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி வரும் “நான் முதல்வன்”, 23 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் “எண்ணும் எழுத்தும் திட்டம்”, 30 லட்சம் மாணவர்கள் பயனடையும் “வாசிப்பு இயக்கம்”, “மாணவர் மனசு” என்ற பெயரில் “ஆலோச னைப் பெட்டி”, 23 லட்சம் பெற் றோர்களை உள்ளடக்கிய “பள்ளி மேலாண்மைக் குழுக்கள்”, அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக “நம்ம ஸ்கூல்-நம்ம ஊரு பள்ளி” திட்டம், “நடமாடும் அறிவியல் ஆய்வகம்”, “வானவில் மன்றம்”; மாணவர்களை நல்வழிப்படுத்தும் “சிற்பி” திட்டம் என தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை முதல்வர் பட்டியலிட்டார்.
ஆகஸ்ட் முதல் ‘தமிழ்ப்புதல்வன்’
மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் “புதுமைப் பெண் திட்டம்” குறித்து பேசிய முதல்வர், தனக்கு மாணவிகளிடம் இருந்து வந்த கடிதங்களாக இருந் தாலும், இந்த தேர்தல் பிரச்சா ரத்தின் போது தான் சந்தித்த மாணவி களாக இருந்தாலும், பலரும் இந்த “புதுமைப்பெண்” திட்டத்தை மிக வும் பாராட்டியதாக குறிப்பிட்டார். அந்த மகிழ்ச்சி மாணவர்கள் முகத்திலும் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் “தமிழ்ப் புதல் வன் திட்டம்” செயல்படுத்தப்படு வதாகவும், மாணவர்கள் கல்லூரி சென்றவுடன் ஆகஸ்ட் மாதத்தி லிருந்து அந்த ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
அரசு ஆசிரியர்களுக்கு அங்கீகாரம்
மேலும் பேசிய முதல்வர், “மாண வர்களின் வெற்றிக்கு துணையாக நிற்பது ஆசிரியர்கள்தான். அந்த ஆசிரியர்களைப் பாராட்ட வேண்டி யது அரசின் கடமை! பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சிப் பெற வைத்த 1,728 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் சாதனை யை ஊக்கப்படுத்த அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப் பட இருக்கிறது. தலைமை ஆசி ரியர்களுக்கு வழங்குகிறோம் என்றால் அது அனைத்து ஆசிரியர் களுக்கும் வழங்கும் அங்கீகாரம்” எனவும் கூறினார்.
ரூ. 10 ஆயிரம் பரிசு தொகை!
“தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்களை பாராட்ட விரும்புகிறேன். எந்த பாடத்தில் நூறு மதிப்பெண் எடுத்தாலும் பாராட்டுக்குரியதுதான். ஆனால், நம்முடைய தாய்மொழி தமிழ். அது வும் உயர்தனிச் செம்மொழி என்ப தால், அதில் 100 மதிப்பெண் பெற்ற வர்கள் சிறப்பான பாராட்டுக்குரிய வர்கள். 12-ஆம் வகுப்பில் 35 பேரும், 10-ஆம் வகுப்பில் 8 பேரும், தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு தேசிய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டு, 95 தங்கப் பதக்கங்களையும், 112 வெள்ளிப் பதக்கங்களையும், 202 வெண்கலப் பதக்கங்களை வென்ற மாணவர்களையும் பாராட்டு கிறேன்.
23 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள்
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 22 ஆயிரத்து 931 ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்க ப்பட இருக்கிறது. வகுப்பறையை குழந்தைகள் மனதிற்குப் பிடித்த இடமாக வண்ணமயமாக மாற்ற, அங்கு ஸ்மார்ட் போர்டு ஒன்றைப் பொருத்தப் போகிறோம். இங்கு இணையதள வசதியும் இருக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பி.கே. சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், மேயர் ஆர். பிரியா, மக்களவை உறுப்பினர் தயா நிதி மாறன், பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி யியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.