புத்தகம் வாசி
வித்தகன் ஆகலாம்...
புத்தகத்தோடு பேசு
மூளையின் மடிப்பில்
புதிய சொற்கள் சேரும்...
காற்காலத்தில்
வானவில் தோன்றும்...
ஊர்கூடி படித்தால்
ஞானவில் தோன்றும்...
யானை பசிக்கு
சோளப்பொறி
ஞானப்பசிக்கு
கவிதை வரி...
தாத்தாவின் வாள் தான்
பரிணாமம் பெற்றிருக்கிறது
பேரனின் புத்தகமாய்...
ஆண்கள் படித்தால்
ஆயசம் போகும்...
பெண்கள் படித்தால்
பெருமிதம் சேரும்...
குடும்பமே படித்தால்
குன்றென உயரலாம்...
ஆறடி மனிதனே
புத்தகம் படி
ஓரடி உயர்வாய்...
வாய்ப்புள்ள போதெல்லாம்
வாசி
முகம் மலரும்...