தஞ்சாவூர், டிச.19 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் 23-வது மாவட்ட மாநாடு, 2-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. இம்மாநாட்டு மேடையில், கேரள மாநில முதலமைச்சரும், சிபிஎம் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராய் விஜயன் எழுதிய, “ஆர்எஸ்எஸ். க்கு எதிராக இந்தியா” என்ற நூலை, கட்சி யின் மத்தியக் குழு உறுப்பினர் பி. சம்பத் வெளியிட, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா பெற்றுக் கொண்டார். அதேபோல், தமுஎகச மன்னார்குடி நகரச் செயலாளரும், இன்சூரன்ஸ் அரங்க முன்னாள் தோழருமான மன்னை இரா.இயேசுதாஸ் எழுதிய, “கோட்டை யில் கொடியேற்றிய பாஷ்யம்” என்ற நூலை, தீக்கதிர் ஆசிரியரும், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான மதுக்கூர் இராமலிங்கம் வெளியிட, மாநாட்டில் கலந்து கொண்ட இளம் பிரதிநிதி தோழர் காயத்ரி பெற்று கொண்டார். ‘கோட்டையில் கொடியேற்றிய பாஷ்யம்’ நூலின் 300-க்கும் மேற்பட்ட பிரதி கள், மாநாட்டில் பங்கேற்ற கட்சி பிரதிநிதி களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.