புதுக்கோட்டை, நவ.13 - பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நான்குமாத சம்பளத்தை விடுவிக்காமல் தொடர்ந்து வஞ்சித்து வரு கிறது. இதனால், பல குடும்பங்கள் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட முடியாமல் தவித்தன. ஒன்றிய அரசின் இத்தகைய வஞ்சகப் போக்கைக் கண்டித்து அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தீபாவளி அன்று மாநில முழுவதும் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது. மேலும், ஒன்றிய அரசைக் கண்டித்தும், உடன டியாக சம்பளத்தை விடுவிக்க வலியுறுத்தி யும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் மேற்கு ஒன்றியம் வம்பன் நால்ரோட்டில் விவ சாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவ ரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.சின்ன துரை கருப்புக்கொடி எற்றி கண்டன உரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் டி.சலோமி, சிஐடியு மாநிலச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், ஜன நாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுசிலா, தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி, சிஐடியு நிர்வாகி தரணி முத்துக்குமார் உள்ளிட் டோர் பங்கேற்றனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் போராட்டத் தில் பங்கேற்றனர்.
ஜாங்கம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட பொருளாளர் இரா.மாலதி, விதொச ஒன்றியக் குழு உறுப்பினர் பி.சின்னையன், கிளைச் செயலாளர் எம்.சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நீடாமங்கலம் நீடாமங்கலம் வாளாச்சேரி கிளையில் நடந்த போராட்டத்திற்கு விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் பி. காளியப்பன் தலைமை வகித்தார். ஒளிமதி யில் விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியக் குழு உறுப்பினர் யு.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் டி.ஜான் கென்னடி, விவசாயிகள் சங்க ஒன்றி யத் தலைவர் பி.பாண்டியன், வாலிபர் சங்கம் ஒன்றியத் தலைவர் ராஜகுரு, வாளாச் சேரி கிளைச் செயலாளர் எ.முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டம் ஆவாராணி ஊராட்சியில் நாகை விதொச ஒன்றியச் செயலாளர் கே.செந்தில்குமார் தலைமை யிலும், தலைஞாயிறு ஒன்றியம் அருந்தவ புலம் கிராமத்தில் விதொச ஒன்றியச் செய லாளர் அலெக்சாண்டர் தலைமையிலும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். செம்பியன் மகா தேவி ஊராட்சியில் விதொச மாவட்டச் செய லாளர் எம்.முருகையன் தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.