districts

img

பரணி வித்யாலயா பள்ளியில் கராத்தே தகுதிப்பட்டை விருது வழங்கல்

கரூர், ஜூலை 16 -

     கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் பயிலும் கராத்தே மாணவர்களின் தனித் திறன்களை பாராட்டி தகுதிப்பட்டை விருது  வழங்கும் விழா நடைபெற்றது.

     கடந்த ஆண்டு கராத்தே தேர்வை வெற்றி கரமாக நிறைவு செய்த 125 மாணவர்கள் அடுத்த நிலைக்கான வண்ணப்பட்டை (பெல்ட்) விருது, தகுதி நிலை நிறைவுச் சான்றி தழ் பெற்றனர். மேலும் 500-க்கும் மேற் பட்ட மாணவர்கள் தங்களது கராத்தே திறமை களை வெளிப்படுத்தினர். நிகழ்விற்கு பரணி  பார்க் கல்விக் குழுமத்தின் தாளாளர் எஸ்.மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங் காவலர் எம்.சுபாஷினி முன்னிலை வகித்த னர்.  

     வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் ‘கியோகுஷின்’ அகில இந்திய தலைவர் ‘சிகான்’ ராம தாஸ் ஆகியோரையும் பரணிக் கல்விக் குழு மத்தின் முதன்மை முதல்வர் சி.ராமசுப்ரமணி யன் பாராட்டினார்.