districts

ஆக.9 வெள்ளையனே வெளியேறு இயக்கம் திருச்சியில் 15 நாட்கள் தெருமுனை பிரச்சாரம் அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 2 -

    அனைத்து தொழிற்சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட கூட்டம் சனிக்கிழமை நடை பெற்றது. கூட்டத்திற்கு தொ.மு.ச தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். சிஐடியு  மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் சீனிவாசன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் சுரேஷ், தலைவர் நட ராஜன், எச்எம்எஸ் ஜான்சன், ஐஎன்டியுசி கல்யாணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பாக 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆக.9  வெள்ளையனே வெளியேறு இயக்கத்தன்று  சென்னையில் பெருந்திரள் தர்ணா நடை பெற உள்ளது. இதனை விளக்கி ஜூலை 15  முதல் 25 ஆம் தேதி வரை, மாவட்டத்தின் 15  இடங்களில் மக்கள் சந்திப்பு தெருமுனை கூட்டங்கள் நடத்துவது என்றும், ஆக.9  அன்று சென்னை தர்ணாவில், திருச்சியி லிருந்து ஆயிரம் பேர் பங்கேற்பது என்றும்  முடிவு செய்யப்பட்டது.