அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி நான்கு வழிச்சாலையில், கோடை வெயிலுக்கான நீர்மோர் தண்ணீர் பந்தலை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். திமுக அரியலூர் மாவட்ட தெற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற திறப்பு விழாவில், தெற்கு ஒன்றியச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் போக்குவரத்து துறை அமைச்சர் பொதுமக்களுக்கு நீர்மோர், நுங்கு, தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார்.