நீதித்துறை காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர், செப்.5- தஞ்சாவூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வின் கீழ் இயங்கிவரும், Legal Aid Defense Counsel System அலுவலகத்திற்கு கீழ்க்காணும் காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. Deputy Chief Legal Aid Defense Counsel (2 பேர்), Assistant Legal Aid Defense Counsel (3 பேர்), Office Assistant/Clerk (ஒருவர்), Office Peon (Munshi / Attendant) (2 பேர்) என மொத்தம் 8 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேற்கண்ட பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களி டமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த முழு தகவல்கள் https://thanjavur.dcourts.gov.in/ என்ற இணையதளத்தில் ‘‘Latest Announcement’’ என்ற தலைப்பில் விவரமாக குறிப்பி டப்பட்டுள்ளது. விருப்பமுள்ள தகுதிவாய்ந்த நபர்கள் மேற்படி இணையதள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை முறையாக பூர்த்தி செய்து வரும் 13.09.2024 தேதி மாலை 5 மணிக்குள் தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தஞ்சாவூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். இறுதி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி கே.பூரண ஜெய ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அழகிரி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் ஆங்கிலம், கணிதம் மன்றம் தொடக்க விழா
பாபநாசம் ,செப்.5- பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் ஆங்கிலம், கணிதம் மன்றம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அறங்காவலர் கைலாசம் தலைமை வகித்தார். பள்ளி ஆங்கிலத் துறை தலைவர் ரகு வரவேற்றார். அறங்காவலர்கள் திருஞான சம்பந்தம், ஜெயராமன் முன்னிலை வகித்த னர். பள்ளி முதல்வர் தீபக் வாழ்த்தினார். ஆங்கில மன்றத்தை கரந்தை தமிழ வேள் உமாமகேசுவரனார் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் மன்மதன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். கணித மன்றத்தை தமிழ்ப் பல்கலைக் கழக பேராசி ரியர் பணி நிறைவு முத்தையன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவி கள் பங்கேற்றனர். பள்ளி கணித துறைத் தலைவர் விஐய குமார் நன்றி கூறினார்.
விருதுநகர் மாவட்டத்தின் நூறாண்டுகளுக்கு முந்தைய அரிய புகைப்படங்கள் தேவை
புத்தக கண்காட்சியில் வரலாறு, பண்பாட்டை காட்சிப்படுத்த பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்
விருதுநகர், செப்.5- விருதுநகர் மாவட்டத் தின் வரலாறு, வளர்ச்சி, பண் பாடு, பின்பற்றிய பழக்க வழக்கங்கள், நடைமுறை கள், தொழில்கள் ஆகிய வற்றை எடுத்துரைக்கும் வகையில் நூறாண்டு களுக்கு முந்தைய, அரிய புகைப்படங்கள் மற்றும் பழமையான, அரிய ஆவ ணங்கள் ஆகியவை பொது மக்களிடம் இருந்து வரவேற் பப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: விருதுநகரில் மூன்றா வது புத்தகத் திருவிழா “மர மும், மரபும்” சுற்றுச்சூழலை யும், நமது பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத் தும் வகையில், வரும் செப்டம் பர் 27 முதல் அக்டோபர் 7 வரை கே.வி.எஸ்.மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்புத்தகக் கண்காட்சி யில், நூறாண்டுகளுக்கு முற் பட்ட தொன்மையான புகைப் படங்கள் மற்றும் ஆவணங் களைக் காட்சிப்படுத்தும் கலைக்காட்சி அரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள் ளது. எனவே, விருதுநகர் மாவட்டத்தின் வரலாறு, வளர்ச்சி, பண்பாடு, பின்பற் றிய பழக்க வழக்கங்கள், நடைமுறைகள், தொழில் கள் ஆகியவற்றை எடுத்து ரைக்கும் வகையில் உள்ள நூறாண்டுகளுக்கு முந் தைய, அரிய புகைப்படங் கள் மற்றும் பழமையான, அரிய ஆவணங்கள் ஆகி யவை பொதுமக்களிடம் இரு ந்து வரவேற்கப்படுகின்றன. மேலும், பொதுமக்க ளால் வழங்கப்படும் புகைப் படங்கள் மற்றும் ஆவ ணங்கள் காட்சிப் படுத்து வதற்காக உரிய முறையில் படியெடுக்கப்பட்டு மீண்டும் உரியவரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படும். எனவே, வரும், செப்டம் பர் 20 தேதிக்குள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் உள்ள மாவட்ட சுற் றுலா அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் வழங்க லாம். மேலும் விபரங்க ளுக்கு 73977-15688 -என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரி வித்துள்ளார்.
செப்.10 - அமைச்சர் உதயநிதி சிவகங்கை மாவட்டம் வருகை
சிவகங்கை, செப்.6- சிவகங்கை மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செப்டம்பர் 10 ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்க உள்ளார். அன்றைய தினம், சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக ளை உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். பின்னர் சிறாவயலில் நடை பெறும் அண்ணல் காந்தி ஜீவா நினைவு மண்டபம் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்கிறார். அதைத் தொடர்ந்து அழ கப்பா பல்கலைக் கழக வளாக அரங்கில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இறுதியாக கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
பிஎஸ்என்எல் செல்போன் இணைய சேவை நிறுத்தம்வாடிக்கையாளர்கள் அவதி விருதுநகர், செப்.5- விருதுநகர் மாவட்டத்தில் எவ்வித முன் அறிவிப்புமின்றி பிஎஸ்என்எல் செல்போன் இணைய சேவை பல மணி நேரம் முடங்கி யது. இதனால் சுமார் 5 லட்சம் வாடிக்கை யாளர்கள் அவதிக்குள்ளாகினர். விருதுநகர் மாவட்டத்தில் பல தனியார் செல்போன் நிறுவனங்கள் உள்ள போதிலும், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் சிம் கார்டுகளையே பலர் பயன் படுத்திவருகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பின ரும் நீண்டகாலமாக பிஎஸ்என்எல் சேவை யையே பயன்பாட்டில் வைத்துள்ளனர். தனி யார் நிறுவன செல்போன் இணைய சேவை யை விட வேகம் குறைவான சேவையை வழங்கிய போதும், பிஎஸ்என்எல் தொலை தொடர்பில் பலர் தொடர்கின்றனர். இந்நிலையில், வியாழனன்று காலை 7 மணி முதல் பிஎஸ்என்எல் செல்போன் இணைய சேவை முற்றிலும் முடக்கப்பட் டது. அதில் பேசு வதற்கு மட்டுமே முடிந்தது. இதனால், வாடிக்கை யாளர்கள், வாட்ஸ்-அப், இ-மெயில், டெலி கிராம், முகநூல் ஆகியவற்றை பார்க்க முடியாம லும், பதில் அனுப்ப முடியாமலும் தவித்தனர். மேலும், பலருடைய பண பரிவர்த்தனை முற்றிலும் முடங்கிப் போனது. எனவே, வாடிக்கை யாளர்கள், செய்வதறியாது திகைத்தனர். இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, எவ்வித பதிலும் தெரி விக்கவில்லை. மேலும், 4ஜியாக மாற்றுவ தற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சிலர் தெரிவித்தனர். ஏற்கனவே, கடந்த பிப்ரவரி 21, ஜூலை 12 மற்றும் ஜூலை 16 ஆகிய தேதிகளில் எவ்வித முன் அறிவிப்புமின்றி பிஎஸ்என்எல் சேவை முற்றிலும் நிறுத்தம் செய்யப்பட்டது. அப்போது, வாடிக்கையாளர்கள் யாரிடமும் தொடர்பு கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
இணைய வழியில் இளைஞரிடம் ரூ.9.49 லட்சம் மோசடி
தஞ்சாவூர், செப்.5- தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரிடம் இணையவழியில் ரூ.9.49 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவை யாறு வட்டத்துக்குட்பட்ட கிரா மத்தைச் சேர்ந்த இளைஞருக்கு ஆகஸ்ட் 12-ஆம் தேதி வாட்ஸ் ஆப்பில் தகவல் வந்தது. அதை அவர் சொடுக்கியபோது டெலிகிராம் செயலிக்குள் சென்றது. அதில் இணையவழியில் டாஸ்க்குகளை நிறைவேற்றினால் நிறைய ஊதியம் கிடைக்கும் என மர்ம நபர் கூறினார். இதை நம்பிய இளைஞர் பல்வேறு தவணைகளில் ரூ.9 லட்சத்து 49 ஆயிரத்து 149-ஐ இணையவழியில் மர்ம நபரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பினார். அதன் பிறகு இளை ஞர் கைப்பேசியில் அழைத்தபோது, அதை மர்ம நபர் ஏற்கவில்லை. இதனால், ஏமாற்றப்பட்டதை அறிந்த இளைஞர் தஞ்சாவூர் சைபர் குற்றக் காவல் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் காவல்துறை யினர் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடிச் சேர்க்கை
அரியலூர், செப்.5- அரியலூர், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடிச் சேர்க்கைக்கான கால அவகாசம் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்த தாவது: அரியலூர், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்புபவர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரவும். ஏற்கனவே பயிற்சியாளர் கள் சேர்க்கை நடைபெற்றதில் மீத முள்ள காலியிடங்களுக்கு மட்டும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடிச் சேர்க்கை நடைபெறுகிறது. 8, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்விய டைந்த மாணவர்கள் விண்ணப்பிக்க லாம். விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ.50, ஒரு ஆண்டு தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.185, 2 ஆண்டு தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.195, மேலும் விவரங்களுக்கு அரிய லூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம்} 9499055877, 04329}228408, ஆண்டி மடம் அரசு தொழிற் பயிற்சி நிலை யம்- 9499055879 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.