அரியலூர்/கரூர், டிச.1- உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி அரியலூரை அடுத்த சிறுவளூர் கிராம அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் சார்பில் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில், பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்திய வாறு கிராமங்கள் முழுவதும் பேர ணியாகச் சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் பள்ளி வளாகத்தில், எய்ட்ஸ் விழிப்பு ணர்வு இலச்சினை வடிவில் நின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடு களை இளையோர் செஞ்சிலுவைச் சங்க பொறுப்பாசிரியர் செந்தில் குமாரன் செய்திருந்தார். பேரணி அரியலூரில் இந்தியன் செஞ்சிலு வைச் சங்கம், சுகாதாரப் பணிகள் துறை சார்பில் சார்பில் விழிப்பு ணர்வுப் பேரணி நடைபெற்றது. அண்ணாசிலை அருகே நடை பெற்ற நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட சுகா தாரப் பணிகள் துணை இயக்குநர் அஜிதா ஆகியோர் பேரணியை கொடி யசைத்து தொடக்கி வைத்தனர். பேரணியானது பிரதான சாலை வழியாகச் சென்று நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. பின்னர் அனை வரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாணவ, மாணவிகள் 300 பேர் கலந்து கொண்டனர். கரூர் உலக எய்ட்ஸ் தினத்தை முன் னிட்டு, கரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில், விழிப்புணர்வு உறுதி மொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.