வேளாண் மாணவர்கள் கள ஆய்வு
பாபநாசம், மே 20- ஆர்.வி.எஸ் வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவி கள் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாரத்தில் கள ஆய்வு மேற்கொண் டனர். இதில் சமூகத் தொண்டு, இயற்கை வேளாண்மை சாகுபடி முறைகள், மகளிர் சுய உதவிக் குழுவின் செயல் பாடுகள், பொருளாதார வளர்ச்சி, சுகாதார வளர்ச்சி, கல்வி மேம் பாடு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. ஆய்வு மேற் கொண்ட மாணவி களுக்கு விவேகானந்தா சமூக கல்வி சங்கம் சார்பில் சான்றிதழ் வழங் கப்பட்டது. இதில் சங்கச் செயலர் கண்ணதாசன், புனிதவள்ளி, மகளிர் குழு நிர்வாகிகள் பங்கேற்ற னர்.
லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஓட்டுநர் படுகாயம்
அரியலூர், மே 20- லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள் ளானதில் அதன் ஓட்டுநர் படுகாயமடைந்தார். கும்பகோணம் அரு கேயுள்ள ஆலங்குடி யைச் சேர்ந்தவர் ஆனந்த்(37). ஓட்டுநரான இவர், திங்கள்கிழமை உத்திரமேரூரில் இருந்து தஞ்சாவூரிலுள்ள டைல்ஸ் தயாரிக்கும் கம்பெனிக்கு மண்ணை லோடு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்றார். அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த ராங்கியம் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ, சாலையோரத்திலுள்ள சிறிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள் ளானது. இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் ஆனந்த் ஆண்டிமடம் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து ஆண்டிமடம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
ஜெனரேட்டரில் சேலை சிக்கி பெண் பலி
பொன்னமராவதி, மே 20 - ஜெனரேட்டரில் சேலை சிக்கியதால் பெண் உயிரிழந்த சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தி யுள்ளது. புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி தாலுகா திருக்களம்பூர் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் ராஜா மனைவி துர்கா (35). இவர் இங்குள்ள கதளீஸ்வரர் திருமண மண்டபத்தில் அடைக்கண் என்பவரின் நிச்சயதார்த்த விழா விற்கு சென்றுள்ளார். அப்போது மண்டபத் திற்கு முன்பு வைக்கப் பட்டிருந்த ஜென ரேட்டரில் சேலை மாட்டி யது. அதனுடன் உடலும் சேர்ந்து மாட்டிய விபத் தில் துர்கா சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இறந்த துர்காவின் உடல் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த துர்காவிற்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
கரூர்: குரூப்-4 இலவச முழு மாதிரிதேர்வு
கரூர், மே 20 - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி-4 இல் அடங்கிய 6,244 காலி யிடங்களுக்கான தேர்வு 9.6.2024 அன்று நடைபெற வுள்ளது. இதையொட்டி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையரால் குரூப்-4 தேர்வுக்கான மாநில அளவில் ஆறு முழு மாதிரி தேர்வுகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வெண்ணைமலையிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மே 17 அன்று, முதல் முழு மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து, மே 21, 24, 27, 30 ஆம் தேதி கள் மற்றும் ஜூன் 1 அன்று இந்த முழு மாதிரி தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வானது, டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வி னைப் போலவே, தமிழ், பொது அறிவு, கணிதம் என 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணி வரை நடக்கும். முழு மாதிரி தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் காலை 9.45 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்திற்கு வர வேண்டும். அப்போது குரூப்-4 தேர்வு விண்ணப்பம், ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். தேர்வர்களுக்கு OMR விடைத்தாள் வழங்கப்படும். தேர்வு முடித்தவுடன் உடனடியாக திருத்தி மதிப்பெண் விவரங்கள் தெரிவிக்கப்படும். அதேபோல், விடைத் தாளுக்கான Answer Key வழங்கப்படும். கரூர் மாவட்டத்தைச் சார்ந்த, விருப்பமுள்ள தேர்வர் கள் இந்த மாதிரி தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறு மாறு ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.
ஓராண்டு தொழில் முனைவோர் பட்டயபடிப்பு: ஆட்சியர் தகவல்
திருச்சிராப்பள்ளி, மே 20 - தமிழக அரசு அகமதாபாத்தில் இயங்கி வரும் இ.டி.ஐ.ஐ. என்ற நிறுவனத்துடன் இணைந்து, ஓராண்டு தொழில் முனைவோர் பயிற்சிக்கான பட்டய படிப்பு வழங்க உள்ளது. சென்னை இ.டி.ஐ.ஐ., தலைமையகத்தில் ஆண்டுக்கு 500 பேருக்கு பயிற்சி வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூபாய் ஒரு லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டய படிப்புக்கான பாடத்திட்டம், மாணவர் சேர்க்கை விதிமுறைகள், மாணவர்கள் தேர்ச்சி குறித்து அந்நிறுவனமே முடிவு செய்யும். ஆங்கில மொழி யில் பயிற்சி இருக்கும் என்பதால், ஆங்கில புலமை இல்லாதோருக்கு சிறப்பு பயிற்சியும் வழங்கும். 21 முதல் 30 வயதுக்குட்பட்ட இளநிலை பட்ட தாரிகள் சேரலாம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு உள்ஒதுக்கீடு செய்யப்படும். நூறு சதவீதம் கல்வி உதவித்தொகை பெற வழி உள்ளது. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பங்கு பெற லாம். இதுகுறித்த கூட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (22.05.2024) புத னன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. கூடுதல் தலைமை செயலாளர் உமாசங்கர் இப்பயிற்சி குறித்து உரையாற்ற உள்ளார். இக்கூட்டத்தில் உயர்கல்வி நிறுவன பிரதிநிதி கள், குறு, சிறு தொழில் சங்கங்களைச் சேர்ந்த பிர முகர்கள் பங்கேற்க உள்ளனர். தொழில் ஆர்வலர் களும் இதில் பங்கேற்கலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித் துள்ளார்.
சேதுபாவாசத்திரம் அருகே கடல் அட்டைகள் வைத்திருந்தவர் கைது
தஞ்சாவூர், மே 20- சேதுபாவாசத்திரம் அருகே, அரசால் தடை விதிக்கப் பட்டுள்ள கடல் அட்டைகளை விற்பனை செய்யக் கொண்டு சென்றவரை வனத்துறையினர் கைது செய்தனர். கடல் அட்டை, கடல் ஆமை, கடல் பசு, கடல் குதிரை உள்ளிட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங் களை பிடிப்பதற்கு அரசு தடைவிதித்துள்ளது. வனத்துறை யினர் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மீனவர் களிடையே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தடைசெய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் தவறுத லாக மீனவர் வலைகளில் சிக்கினால் அவற்றை திரும்ப வும் உயிருடன் கடலில் விடும் மீனவர்களுக்கு, ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வருகின்ற னர். இந்நிலையில், பட்டுக்கோட்டை வனச்சரகத்திற்குட் பட்ட, சேதுபாவாசத்திரம் அருகே உள்ள செந்தலை வயல் கடற்கரையில் பட்டுக்கோட்டை வனச்சரக அலுவ லர் சந்திரசேகரன், வனவர் சிவசங்கர், ஆவணம் பீட் வனக் காப்பாளர் கலைச்செல்வன் மற்றும் வனக்காப்பா ளர் மணவாளன் ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்ட னர். அப்போது, சாக்குப்பையுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த செந்தலைவயல் கிரா மத்தைச் சேர்ந்த கலிபுல்லா என்பவரை நிறுத்தி சோதனை செய்தபோது, சுமார் 30 கிலோ எடையுள்ள 92 கடல் அட்டை களை பிடித்து விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின்படி, கலிபுல்லா மீது உயிரின குற்ற வழக்குப் பதிந்து பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிபதி உத்தரவின்பேரில், அவர் தஞ்சாவூர் கிளைச் சிறையில் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப் பட்டார்.
நாய்களால் துரத்தப்பட்ட கிளைமான் உயிரிழப்பு
அரியலூர், மே 20- அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட் பட்ட மேலப்பழுவூர் கிராமத்தில், தென்புறம் காட்டுப் பகுதியில் இருந்து நாய்களால் விரட்டப்பட்ட கிளைமான் தப்பித்து ஊருக்குள் வந்தது. இதில் அந்த கிளைமானின் கொம்பு உடைந்து ரத்தம் வெளியேறியதைப் பார்த்தவுடன், பொதுமக்கள் கர வெட்டி பறவைகள் சரணாலய வனத்துறை பணியா ளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் மற்றும் கால்நடை மருத்து வர் கார்த்திகேயன் ஆகியோர் காயம் பட்ட மானுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அந்த மானை சரக்கு ஆட்டோ வில் ஏற்றிக்கொண்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போதே, அந்த கிளைமான் இறந்து விட்டது. இதைய டுத்து வனத்துறையினர், உடற்கூறாய்வு செய்து மானை அடக்கம் செய்தனர். இதுகுறித்து மேலப்பழுவூர் கிராம மக்கள் கூறுகை யில், “இந்த காட்டுப் பகுதியில் ஏராளமான மான்கள் இருக்கின்றன. தண்ணீர் தேடி அலைந்து கொண்டிருக்கும் போது தெருநாய்களால் துரத்தப்பட்டு, உயிருக்கு போரா டும் சூழ்நிலை உருவாகிறது. எனவே மான்கள் வனப்பகுதி யிலேயே தண்ணீர் குடிப்பதற்கு ஆங்காங்கே தொட்டி அமைக்க வேண்டும். தொட்டி அமைத்தால் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க வாய்ப்புள்ளது” என்றனர்.
களை இழந்த கொடைக்கானல் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
திண்டுக்கல், மே 20- கொடைக்கானலில் நீதிமன்ற உத்தர வின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட இ பாஸ் நடைமுறை காரணமாக சுற் றுலா பயணிகளின் வருகை குறைந்தது. வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்ததாக வேதனையுடன் தெரிவித்தனர். மலைகளின் இளவரசி என்று சொல் லப்படுகிற கொடைக்கானல் உலகப் பிர சித்தி பெற்றது. கேரளா ஆந்திரா கர் நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாடு முழுவதும் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோடை காலங்களில் வெப்பத்தை தணிப்பதற்காக குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக வந்து செல்லக்கூடிய நிலை உள்ளது. கொடைக்கானல் அழகை ரசிப்பதற்காக, அதன் குளிர்ச்சியை அனுபவிப்பதற்காக வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு பெரும் தடைக்கல்லாக தற்போது நீதி மன்ற உத்தரவின்படி இ பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தற்போது கொடைக்கானல் நகரம் பொலிவிழந்து காணப்படுகிறது. மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி உள்ளது. பொதுவாக கோடை விழா துவக்க நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற் றுலா பயணிகள் வருவார்கள் .ஆனால் இந்த ஆண்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்களே வந்திருக்கிறார்கள். கோடை விழா என்பது ஒரு சீசனல் விழா. இந்த 10 நாட்க ளில் கொடைக்கானல் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள உத வும் விழா. சுற்றுலா வழிகாட்டிகள், டாக்ஸி ஓட்டுநர்கள், விடுதிக் காப்பாளர்கள், உரிமையாளர்கள், உணவு விடுதி உரிமை யாளர்கள், சாலையோர வியாபாரிகள் என ஆயிரக்கணக்கான கொடைக்கானல் நகர குடும்பங்கள் இந்த சீசனை பயன்படுத்தி ஆண்டு முழுவதற்கான தங்களது வாழ்வா தாரத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். இந் நிலையில் பாஸ் நடைமுறை அமல்படுத்தப் பட்டதால் கொடைக்கானல் நகரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதியாக குறைந் துள்ளார்கள்.
ஜெகதாப்பட்டினத்தில் ரத்த தான முகாம்
அறந்தாங்கி, மே 20 - புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜெகதாப்பட்டினம் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் 2 ஆவது ரத்த தானம் முகாம் ஜெகதாப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சபி யுல்லா தலைமை வகித்தார். கிளைத் தலைவர் அப்பாஸ் கான், செயலாளர் முகமது காசிம், பொருளாளர் அன்வர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூற்றுக்கணக் கான ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்தனர். மருத்துவ தகுதி அடிப்படையில் 30 யூனிட் ரத்தம் கொடையாக பெறப்பட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவ மனைக்கு வழங்கப்பட்டது. ரத்தம் வழங்கிய அனை வருக்கும் மருத்துவர் ராதாகிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் இம்முகாமில் பங்கேற்ற அறந்தாங்கி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மேலாளர் மருத்துவர் ராதா கிருஷ்ணன் மற்றும் அவரது குழுவிற்கும், ரத்தம் தானம் செய்தவர்களுக்கும், முகாம் ஏற்பாடுகளை செய்தவர்களுக் கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மருத்துவ அணி செய லாளர் சபிபுல்லா நன்றி கூறினார்.
விவசாயிகளுக்கு பயறு நுண்ணூட்டம் செயல் விளக்கம்
தஞ்சாவூர், மே 20- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரத் தில், அட்மா திட்டத்தின்கீழ் உளுந்து சாகுபடி செய்த விவ சாயிகளுக்கு பயறு நுண்ணூட்டம் செயல் விளக்கத் தினை, தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) அய்யம்பெரு மாள் வழங்கினார். உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கு ஏக்க ருக்கு 2 கிலோ பயறு நுண்ணூட்டத்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, பூக்கும் மற்றும் காய்பிடிக்கும் தரு ணத்தில் இலைவழி தெளிப்பாக தெளிக்க வேண்டும் என்று விவசாயிகளிடம் கூறினார். தொடர்ந்து வேளாண்மை உதவி இயக்குநர் ஜி.சாந்தி பேசுகையில், “வேளாண்மை விரிவாக்க மையத்தில் 50 சத வீதம் மானியத்தில் நெல் நுண்ணூட்டம், பயறு நுண்ணூட் டம், நிலக்கடலை நுண்ணூட்டம் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. தேவைப்படும் விவசாயிகள் தங்களது தொகுதி உதவி வேளாண்மை அலுவலரை அணுகி நுண்ணூட்டத்தினை வாங்கி பயன்பெறலாம்” என்றார். பயறு நுண்ணூட்ட செயல்விளக்கத்தினை துணை வேளாண்மை அலுவலர் து.சிவசுப்பிரமணியன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் மோ.சுரேஷ் ஆகியோர் செய்து காண்பித்தனர். தொடர்ந்து விவசாயிகளுக்கு பயறு, கடலை, நெல் நுண்ணூட்டம் மானியத்தில் வழங்கப்பட்டது.
சீல் வைக்கச் சென்ற அரசு அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் பட்டாசு கடை உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு
சிவகாசி, மே 20 விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அனுப் பன்குளத்தில்வடிவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசுக் கடை உள்ளது. அக்கடையின் அருகே, தகர செட் மற்றும் ஒரு கட்டிடத்தில் அனுமதியின்றி பட்டாசு தயா ரிக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சிவகாசி வட்டாட்சியர் வடிவேலு, பட்டாசு-தீப்பெட்டி தனி வட்டாட்சியர் திருப்பதி தலை மையிலான அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அதில், சட்ட விரோதமாக பட்டாசு உற் பத்தியும் பட்டாசுகளை இருப்பு வைத்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி யை சீல் வைக்க வட்டாட்சி யர்கள் உத்தரவிட்டனர். அதன்பேரில், வருவாய் ஆய்வாளர் விக்னேஸ்வரன், அனுப்பன்குளம் கிராம நிர்வாக அலுவலர் காளி யப்பன் ஆகியோர் சீல் வைக்க சென்றுள்ளனர். அப்போது, பட்டாசு கடை உரிமையாளர் வடி வேல், அவரது சகோதரர் சக்திவேல், உட்பட 3 பேர் கொலை மிரட்டல் விடு விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காளி யப்பன், சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், 3 பேர் மீதும் போலீசார் வழக் குப் பதிந்து விசாரிக்கின்றனர்.