districts

img

மேம்பாலங்களில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் வீட்டு மாடிகளில் வைக்கப்படும் விளம்பர பதாகைகள்

விருதுநகர், மே 19- விருதுநகரில் உள்ள மேம் பாலங்களில் செல்லும் வாகன ஓட்டி களின் கவனத்தை சிதறடித்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் வீட்டு மாடிகளின் மேலுள்ள விளம்பரப் பதாகைகளை உடனே  அகற்ற வேண்டுமென பொது மக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகரின் முக்கிய சாலை யாக இருந்து வருவது அருப்புக் கோட்டை சாலையாகும். கருமாதி மடம் பகுதியிலிருந்து சற்று தொலை  வில் ரயில்வே மேம்பாலம் உள்ளது.  அதன் இருபுறங்களிலும் ஏராள மான வீடுகள் உள்ளன. அதன் மாடி யில் தனியார் விளம்பரப் பதாகை கள் பொருத்துவது அதிகரித்துள் ளது.  இந்த விளம்பரங்கள், வாகன  ஓட்டுனர்களுக்கு கவனச் சிதறலை ஏற்படுத்துகிறது. எதிரே வரும் வாக னங்களில் மோதி விபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது. எனவே, இந்த விளம்பர பதாகைகளை உடனடி யாக அகற்ற வேண்டும். மேலும்,  விளம்பரப்பதாகைகளை பணத்தை  பெற்றுக் கொண்டு பொருத்த அனு மதியளித்த வீட்டின் உரிமை யாளர்கள் மற்றும் நிறுவனத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் தெரி விக்கின்றனர். இதுகுறித்து நீராவித் தெரு  பகுதியை சேர்ந்த எம்.மாரிமுத்து  கூறுகையில், கடந்த சில தினங்க ளுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநி லம் மும்பையில் பலத்தக் காற்று  வீசியதில் பெரிய விளம்பர பதாகை  திடீரென கீழே விழுந்ததில் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், அருப்புக்கோட்டை சாலை மேம் பாலத்தின் இருபுறமும் போட்டி போட்டுக் கொண்டு தனியார் பலர்  விளம்பர பதாகைகளை வைத்  துள்ளனர். தற்போது விருதுநகர் பகுதியில் கோடை மழை பெய்து  வருகிறது. ஒருவேளை, பலத்தக்  காற்று வீசினால் விளம்பர பதாகை கள் உடைந்து பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுந்தால் சங்கிலித் தொடர் விபத்து ஏற் பட்டு உயிர்ப்பலியாகும் நிலை உள்ளது. ஆகவே, விபத்து ஏற் படும் முன் விழிப்புணர்வுடன் பதா கைகளை அகற்றிட வேண்டும் என தெரிவித்தார்.  எனவே, மாவட்ட நிர்வாகம், உட னடியாக விருதுநகர் மேம்பாலங் களின் ஓரங்களில் உள்ள வீட்டு மாடிகளில் வாகன ஓட்டிகளின் கவ னத்தை திசை திருப்பும் வகையில் அனுமதியின்றி பொருத்தப்பட்ட விளம்பர பதாகைகளை உடனடி யாக அகற்றிட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

;