உதகை, ஜூலை 8-
530 டேன் டீ தற்காலிக தொழிலா ளர்களுக்கு பணி வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என பந்தலூ ரில் நடைபெற்ற தொழிற்சங்க நிர்வா கிகளுடனான கூட்டத்தில் அமைச்சர் மா.மதிவேந்தன் உறுதியளித்தார்.
நீலகிரி மாவட்டம், பந்தலூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் மற் றும் டேன்டீ தொழிற்சங்க கூட்ட மைப்பு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு 4 ஆண்டு களுக்கு ஒருமுறை அறிவித்த டேன்டீ தொழிலாளர்கள் ஊதியம் 30-9-2021 ஆம் ஆண்டுடன் முடிவடைந்து விட் டது. ஆனால் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காததால் தொழி லாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். விலைவாசி உயர்வால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நிர்வாகம் 1-10-2020 ஆம் ஆண்டு முதல் டேன்டீ தொழிலாளர் களுக்கு தற்போது வழங்கி வரும் 363 ரூபாய் 90 பைசா ஊதியத்தை அடிப் படையாக வைத்து ஒரு நாளைக்கு 100 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்க வேண்டும். கடந்த 2022 ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்த 530 தற் காலிக தொழிலாளர்களுக்கு உடன டியாக பணி வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
மேலும், இது தவறும்பட்சத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தொழிலாளர்கள் பொது வேலை நிறுத் தம் மற்றும் மறியல் போராட்டம் நடத் துவது, உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும், இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர், டேன்டீ நிர்வாக இயக்குநர், மாவட்ட ஆட்சி யர், காவல்துறையினருக்கும் மனுக் கள் அனுப்புவது என்றும் தீர்மானம் நிறைவேற்பட்டது. இதையடுத்து பந்தலூர், நெல்லியாளம் நகர்மன்ற அலுவலகத்தில் டேன்டீ தொழிலா ளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு வனத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தலைமை வகித்து பேசுகையில், தேயிலை தோட்ட தொழிலாளர்க ளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.425 சம்பளம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், சில தொழிற் சங்கங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் குறிப்பிட்ட சம்பளம் வழங்க முடியவில்லை. ஆனால், இது தொடர்பான அனைத்து பிரச்சனை களும் முதல்வரிடம் நேரிடையாக தெரிவித்து நடவடிக்கை எடுக்கப் படும். 530 தற்காலிக தொழிலாளர்க ளுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
முன்னதாக, இக்கூட்டத்தில் ஆட்சியர் சா.ப.அம்ரித், முதன்மை தலைமை உயிரின பாதுகாவலர் சுப் ரத்மஹோபத்ரா, கூடலூர் மாவட்ட வன அலுவலர் ஓம்கார், அரசு தேயிலை தோட்ட பொதுமேலாளர் அசோக், தேயிலை தோட்ட மேலா ளர்கள், தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.