கும்பகோணம், ஜூலை 13-
கும்பகோணத்தில் குற்ற சம்பவங்கள் எது நடந்தா லும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் துணைக் காவல் கண்காணிப்பாளர் கீர்த்திவாசன், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உட்கோட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளராக கீர்த்திவாசன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கும்பகோணம் உட்கோட்டப் பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் எது நடந்தாலும் உடனுக்குடன் நட வடிக்கை எடுக்கப்படும், நகரத்துக்குள் ஏற்படும் போக்கு வரத்து நெரிசல் ஒழுங்குபடுத்தபடும் பொதுமக்களின் நம்பிக்கையை பெரும் வகையில் காவல்துறை பணி யாற்றும். தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்கள் கும்பகோணத்துக்குள் நுழையாத வகையில் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை பணிகளை சிறப்பாக செயல்படுத்த பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்களின் ஒத்து ழைப்பு வழங்கவேண்டுமென்றார்.