புதுக்கோட்டை, அக்.2 - மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, திங்கட்கிழமை அவரது உருவச் சிலை மற்றும் படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. இத னொரு பகுதியாக, டெல்டா மாவட்டங்க ளின் பல்வேறு இடங்களில் வெகுஜன அமைப்புகள் சார்பில் மாலை அணி வித்து, மதநல்லிணக்கம், சமூக ஒற்றுமை உறுதிமொழி ஏற்கப்பட்டது. புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ.சந்திரசேகரன், மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் எம்.அசோசன், சிபிஎம் நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் டி.சலோமி, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜனார்த்தனன், அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எம்.சின்னதுரை பங்கேற்பு கந்தர்வகோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரா மையன் மற்றும் ஒன்றியச் செய லாளர்கள் பங்கேற்றனர். ஆலங்குடியில் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் சு.மதியழகன், ஒன்றி யச் செயலாளர் எல்.வடிவேல் உள்ளிட்டோ ரும், கறம்பக்குடியில் எவரெஸ்ட் சுரேஷ் தலைமையில் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் த.அன்பழகன், அறிவி யல் இயக்க மாவட்டச் செயலாளர் மு. முத்துக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற் றனர்.
திருச்சிராப்பள்ளி
தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் தெப்பக்குளம் அருகில் உள்ள காந்தி யின் உருவ சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை திருச்சி மாநகர் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பி.சுப்ரமணியன் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பி னர் எஸ்.ஸ்ரீதர், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் சீனிவாசன் உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். உறையூர், முஸ்லிம்தெரு, கவுண்டம் பாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநகர் மாவட்டச் செயலா ளர் ரபிக்அஹமது தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்த கம், பென்சில், ஸ்கேல், ரப்பர் உள்ளிட்ட எழுதுப் பொருட்கள் வழங்கப்பட்டன. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை யின் திருச்சி புறநகர் மாவட்டக்குழு சார்பில் மணப்பாறையில் காந்தியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செய்யப்பட்டது. இதில் புறநகர் மாவட்ட அமைப்பாளர் சிதம்பரம், மணப் பாறை மறைவட்ட உதவி அருட்தந்தை பிரிட்டோ பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நாகப்பட்டி னம் ஒருங்கிணைப்பாளர் வி.சுப்பிரமணி யன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ப.சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலை யம் அருகே, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ஆர்.புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார். இதில் மூத்த தோழர் என். சீனிவாசன், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி உருவச்சிலைக்கு மூத்த தலைவர் என்.சீனிவாசன், கோ.நீலமேகம் ஆகி யோர் தலைமையில் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். பேராவூர ணியில் மகாத்மா காந்தி உருவச் சிலைக்கு, சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.
கும்பகோணம்
அரசு அனைத்து துறை ஓய்வூதி யர்கள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் பொரு ளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா ஆகியோர் கும்பகோணம் உச்சி பிள்ளை யார் கோயில் அருகில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மத நல்லி ணக்க உறுதிமொழி ஏற்றுக் கொண்ட னர். திருவாரூர் சிபிஎம் திருவாரூர் மாவட்டக் குழு அலு வலகத்தில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக மாவட்டச் செய லாளர் எஸ்.ராமசாமி தலைமையில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. அரியலூர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டத்தில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மாவட்ட அமைப்பாளர் இரா.மணி வேல் காந்தி சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.செந்தில்வேல், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடா சலம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் என்.அருணாசலம் உள்ளிட்டோர் மதநல்லிணக்க உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். சிபிஎம் சார்பில் நடந்த நிகழ்ச்சி க்கு ஒன்றியச் செயலாளர் அருண்பாண் டியன் தலைமை வைத்தார். மாவட்டச் செயலாளர் இளங்கோவன் உட்பட பலர் பங்கேற்றனர்.