districts

img

கலைஞர் கோட்டத்தில் உறுதிமொழி ஏற்பு

கும்பகோணம், மார்ச் 1-  தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில், கும்பகோணம் பைபாஸ் சாலையில் உள்ள கலைஞர் கோட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டக் கழக நிர்வாகிகள் நசீர் முகமது, ஜெ.நடராஜன் ஆகியோர் தலைமையில் கலைஞர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.