மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் கோட்டச் செயலாளர் நெடுமாறன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் சி.முருகேசன், மாவட்ட துணை தலைவர் வி.பாலசுப்ரமணியம், மின் ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் கே.செல்வம் ஆகியோர் பேசினர்.