திருச்சிராப்பள்ளி, மே 14- திருச்சி திருவானைக்கோயிலில் உள்ள 180 எச்.பி. திறன் கொண்ட பம்பிங் ஸ்டேசன் மூலம் பஞ்சப்பூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் நோக்கி கழிவு நீர் செலுத்தப்படுகிறது. யுஜிடி திட்டம் 2002-2003 நிதியாண்டில் தொடங்கப் பட்டதால், சாலைகளுக்கு கீழே அமைந்துள்ள முக்கிய குழாய்கள் அவ்வப்போது உடைந்து வருகின்றன. குழாய்களில் இருந்து சிறிய கசிவுகள் குழாய்களுக்கு கீழே உள்ள மண் குழிக்கு வழிவகுக்கும், மேலும் சரியான சப்போர்ட் இல்லாத குழாய்கள் விரிசல்களை உருவாக்கி இறுதியில் வெடிக்கும். ஸ்ரீரங்கத்தை சென்னை டிரங்க் சாலையுடன் இணைக்கும் காந்தி சாலையில் ஒரு வாரத்தில் இதுபோன்ற இரண்டு வெடிப்புகள் பதிவாகியுள்ளன. வெள்ளிக்கிழமை, காந்தி சாலையில் 8 அடி நீளமுள்ள கழிவுநீர் குழாய் வெடித்ததால் பள்ளம் ஏற்பட்டது.ஆர்.சி.சி பைப்லைன்களை நிரந்தர தீர்வாக இரும்பு குழாய்கள் மூலம் மாற்றும் திட்டத்தை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். காந்தி சாலையில் 8 அடி ஆழத்தில் சுமார் 700 மீட்டர் நீளமுள்ள பைப்லைன்களை மாற்ற வேண்டும்” என்று திருச்சி மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், இரும்புக் குழாய்கள் கசிவு ஏற்படுவதையும் சாலைகளில் பள்ளம் ஏற்படுவதையும் தடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குழாய் மாற்றும் திட்டத்தால், மாநகராட்சிக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் செலவாகும் என மாநகராட்சி அதிகாரி மேலும் தெரிவித்தார்.