districts

திருச்சி முக்கிய செய்திகள்

அரசுக்கு சொந்தமான தைலம் மரத் தோப்பில் தீ

அரியலூர், மே 31 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பிச்சனூர் கிரா மத்தில் அரசுக்கு சொந்த மான 5 ஏக்கர் தைல மரம்  தோப்பு உள்ளது. இங்கு திடீரென தீப்பற்றி தோப்பு முழுவதும் தீ மளமளவென அனைத்து இடங்களிலும் பற்றி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இதனை அவ்வழி யாக சென்றவர்கள் பார்த்து, ஜெயங்கொண் டம் தீயணைப்பு துறையி னருக்கு தகவல் தெரி வித்தனர். தோப்பு முழு வதும் தீ எரிந்ததால், தீய ணைப்புத் துறையினர் தீயை அணைக்க மிகவும்  போராடினர். இதை யடுத்து தீயணைப்புத் துறையினர் அருகில் இருந்த மர கிளைகளை உடைத்து, அதன் மூலம் தீய கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்பு, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை போராடி அணைத்தனர். 

பிரகதீஸ்வரர் ஆலயம்  உண்டியல் வசூல் ரூ.4.11 லட்சம்

அரியலூர், மே 31- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந் துள்ள சோழப் பேரரசின் மாமன்னன் ராஜேந்திர  சோழனால் அமைக்கப் பட்ட பிரகதீஸ்வரர் ஆல யம் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.  மேலும் யுனெஸ்கோ வால் பராமரிக்கப்படும் தொன்மையான புராத னச் சின்னமாகவும் உள்ளது. இவ்வாறு சிறப்பு வாய்ந்த இக்கோ யிலின் உண்டியல் காணிக்கை வெள்ளி யன்று பொதுமக்கள் மற்றும் கோவில் பணியா ளர்கள், கோவிலின் செயல் அலுவலர் முன்னி லையில் எண்ணப்பட்டது.  இதில் பணமாக ரூ.60, 547, சில்லறையாக ரூ.3.51  லட்சம் மற்றும் வெளிநாட்டு  பணமாக இரண்டு டாலர் என மொத்தம் ரூ.4,11,627 காணிக்கையாக கடந்த மூன்று மாதத்தில் பெறப் பட்டுள்ளது.

புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கூட்டம்

பாபநாசம், மே 31 - உலக புகையிலை எதிர்ப்புத் தினத்தை யொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மெலட்டூரில் விழிப்புணர்வுக் கூட்டம்  நடைபெற்றது. இதற்கு  வட்டார மருத்துவ அலு வலர் அஜந்தன் தலைமை  வகித்தார். மாவட்ட சுகா தார அலுவலரின் நேர்முக  உதவியாளர் இளங் கோவன் பேசினார். மாவட்ட நல கல்வியாளர்  செல்வம், வட்டார சுகா தார மேற்பார்வையாளர் சுரேஷ்குமார், நம்பிக்கை  மைய ஆலோசகர் செல்லமணி, கொத்தங் குடி ஊராட்சி மன்றத் தலைவர் பழனி, வர்த்தக  சங்கத் தலைவர் பால சுப்பிரமணியன், செயலர்  பாலாஜி, துணைச் செய லர் லோகநாதன், சுகா தாரப் பணியாளர்கள், பேரூராட்சி தூய்மைக் காவலர்கள் கலந்து கொண்டனர்.

இளைஞரிடம் இணையவழியில்  ரூ. 26.26 லட்சம் மோசடி

தஞ்சாவூர், மே 31-  தஞ்சாவூர் அருகே அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த  வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வரும் 42 வயது நபருக்கு, கடந்த ஏப்ரல் மாதம் பேஸ்புக் செயலியில் அடை யாளம் தெரியாத மர்ம நபர் அனுப்பிய தகவல் வந்தது. அதில், இணையவழி மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்து,  வர்த்தகம் செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் எனக் குறிப் பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய அவர் அதிலிருந்த கைப்பேசி எண்ணில்  தொடர்பு கொண்டபோது, அவருடைய எண்ணை, மர்ம நபர்கள் தங்களது வாட்ஸ் ஆப் குழுவில் இணைத்தனர். வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்த அவர், மர்ம நபர்களு டன் தகவல்களைப் பரிமாறிக் கொண்டார். அப்போது மர்ம நபர்கள் கூறியபடி, இணைய வழியில்  பல்வேறு தவணைகளில் ரூ.26.60 லட்சம் முதலீடு செய்தார்.  ஆனால், இதற்கான லாபத் தொகையாக ரூ.36 ஆயிரம்  மட்டுமே கிடைத்தது. இது தொடர்பாக அவர் மர்ம நபர்களைத்  தொடர்பு கொண்டபோது, மேலும் தொகையை அனுப்பினால்  லாபம் கிடைக்கும் எனக் கூறி வாட்ஸ் ஆப் குழுவிலிருந்து வெளியேறி விட்டனர். இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட நபர் தஞ்சாவூர் இணையதளக் குற்றப் பிரிவில்  புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் புதன் கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் சேர்க்கை தொடக்கம்

கும்பகோணம், மே 31 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் தன்னாட்சி  மகளிர் கலைக் கல்லூரியில் 2024-25 ஆம் கல்வியாஷ் டுக்கான மாணவிகள் சேர்க்கை தொடங்கியது.  இதுகுறித்து கல்லூரி முதல்வர் அகிலா கூறுகையில், “இந்தாண்டு ரத்த குறைபாடு நோய்களையும் மாற்றுத்திறன் வகையில் அரசு இணைத்துள்ளது. இதுகுறித்து விவரம் தெரியாத, ரத்த குறைபாடு நோய்களால் பாதிக்கப்பட்ட மாணவிகள் யாராவது மாற்றுத்திறனாளிகள் பிரிவில் விண் ணப்பிக்காமல் இருந்தால் அவர்களுக்கும் தற்போது வாய்ப்பு அளிக்கப்படும். முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 10 ஆம் தேதி நடக்கிறது.  அன்று 310 மற்றும் அதற்கு மேல் கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ள மாணவிகளுக்கும், ஜூன் 11 அன்று 309-260 கட்  ஆப் மதிப்பெண் பெற்றுள்ள மாணவிகளுக்கும், ஜூன் 12  அன்று 259 முதல் 225 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ள  மாணவிகளுக்கும், ஜூன் 13 அன்று 224 மற்றும் அதற்குகீழ் கட்  ஆப் மதிப்பெண் பெற்றுள்ள மாணவிகளுக்கும் கலந்தாய்வு  நடைபெறுகிறது.  இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு, அனைத்து அறிவியல் பிரிவுகளுக்கும் ஜூன்  24 அன்றும், அனைத்து கலைப் பிரிவுகளுக்கும் ஜூன் 25 அன்றும் நடை பெற உள்ளது” என்றார்.

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற  வழக்கில் 5 பேருக்கு 20 ஆண்டு சிறை

தஞ்சாவூர், மே 31- நாகப்பட்டினம் கடற் கரையில் கடந்த 2020 ஆம்  ஆண்டு பிப்.12 அன்று இரவு, கஞ்சா கடத்தப்பட உள்ள தாக மதுரை மண்டல போதைப் பொருள் தடுப்பு  பிரிவு காவல்துறையின ருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், நாகப்பட் டினம் மாவட்டம் வேதாரண் யம் அருகே ஆயக்காரன் புலம் என்ற கிராமத்தில், காவல்துறையினர் சோத னையில் ஈடுபட்டனர். அப் போது அங்கு வந்த கண்டெய் னர் லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில், பழுப்பு நிற  டேப் சுற்றப்பட்ட 310 பாக் கெட்களில் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.  மேலும், வண்டியின் பதிவு எண்ணை ஆய்வு செய்த போது, ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட  வண்டிக்கு தமிழக பதிவு  எண்ணை ஒட்டி, பயன்ப டுத்தியது தெரிந்தது. இது தொடர்பாக வண்டி யில் இருந்த சென்னை திரு வொற்றியூரைச் சேர்ந்த ரமணன் (43), தவமணி (38),  நாகப்பட்டினம் மாவட்டத் தைச் சேர்ந்த ஐயப்பன் (39), பரமானந்தம் (47),  செல்வராஜ் (58) ஆகிய  ஐந்து பேரை காவ‌ல்துறை‌ யின‌ர் கைது செய்தனர்.  விசாரணையில், ரமணன்  மற்றும் தவமணி இருவரும் ஆந்திர மாநிலம் அனகா பல்லியில் இருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்.6 ஆம்  தேதி லாரியில் கஞ்சாவை எடுத்து வந்தனர். பிறகு  ஐயப்பன், பரமானந்தம், செல்வராஜ் ஆகியோரு டன் இணைந்து நாகப்பட்டி னத்தில் இருந்து இலங் கைக்கு படகு மூலம் கடத்து வதற்காக 310 பொட்டலங் களில் இருந்த 661.50 கிலோ கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது. இவ்வழக்கு, தஞ்சாவூர்  கூடுதல் மாவட்ட நீதிமன்றத் தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதி பதி ஜி.சுந்தரராஜன் கஞ்சா  வழக்கில் கைது செய்யப் பட்ட ரமணன், தவமணி, ஐயப்பன், பரமானந்தம், செல்வராஜ் ஆகிய ஐந்து  பேருக்கும் தலா 20 ஆண்டு கள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராத மும் விதித்து தீர்ப்பளித்தார்.

பல்துறை உயர் அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

மயிலாடுதுறை, மே 31-  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட ரங்கில், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம்  மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற் றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்துறை உயர் அலுவ லர்களைக் கொண்ட மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு  அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துவதற்கு அமைக்கப்பட்டு உள்ளது.  இக்குழுவானது 2024-2025 கல்வியாண்டில் மயிலாடு துறை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் உள்கட்ட மைப்பு வசதிகள், வகுப்பு வாரியான கற்றல் நிலை, பள்ளி  மேலாண்மை குழு, பள்ளி செல்லா குழந்தைகள், உயர்கல்வி  வழிகாட்டுதல் போன்ற அனைத்து நிலைகளிலும் பள்ளி  மாணவர்களின் உயர்வுக்கும் பள்ளிகளின் மறுகட்டமைப்புக் கும் தங்கள் துறை சார்ந்த உதவிகளை வழங்குவதற்கும் வழி காட்டுவதற்கும் இக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில், பள்ளி அளவில் பள்ளி மேலாண்மை குழுவின்  செயல்பாடுகள் மற்றும் ஏற்றப்பட்ட தீர்மானங்கள், பள்ளி  கட்டமைப்புகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கை கள் குறித்து மாவட்ட ஆட்சியர் விரிவாக ஆலோசனை மேற் கொண்டார். முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அரசுக் குழந்தைகள் இல்லத்திலிருந்து 3 சிறுமிகள் தப்பியோட்டம்

புதுக்கோட்டை, மே 31 - புதுக்கோட்டை நரிமேட்டிலுள்ள அரசுக் குழந்தைகள் இல்லத்தில் இருந்து 3 சிறுமிகள் வியாழக்கிழமை இரவு தப்பி யோடினர். புதுக்கோட்டை நரிமேட்டில் அன்னை சத்யா அம்மை யார் நினைவு அரசுக் குழந்தைகள் இல்லம் உள்ளது. இந்த  இல்லத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 18 வயதுக்குட்பட்ட சிறார் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இல்லத்தில் தங்கியிருந்த மாவட்டத் தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 3 சிறுமிகள் வியாழக் கிழமை இரவு தப்பியோடினர். இதுகுறித்து இல்லத்தின் கண்காணிப்பாளர் பரமேஸ்வரி, திருக்கோகர்ணம் காவல்  நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், இல்லத்துக் குச் சென்று அங்குள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் சோத னையிட்டனர். 3 சிறுமிகளும் கதவைத் திறந்து, பின்பக்கச் சுவரில்  ஏறிக் குதித்து தப்பியோடுவது தெரியவந்தது. இதனைத்  தொடர்ந்து நகரின் பல பகுதிகளிலுள்ள சிசிடிவி காட்சிகளை யும் போலீசார் ஆய்வு செய்தனர். புதுக்கோட்டை பேருந்து  நிலையத்தில் அவர்கள் சுற்றித் திரியும் வீடியோ பதிவுகள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சிமெண்ட் குழாய் தவறி  விழுந்து ஒருவர் பலி

தஞ்சாவூர், மே 31-  பேராவூரணி அருகே, பொக்லைன் இயந்திரம் மூலம்  சிமெண்ட் குழாயை இறக்கிய போது தவறி விழுந்து ஒருவர் பரிதாபமாக பலியானார்.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள  வாத்தலைக்காடு கிராமத்தில், அண்ணாமலை என்பவ ருக்கு சொந்தமான தென்னந்தோப்பிற்கு தண்ணீர் செல்லும் வகையில், சிமெண்ட் குழாய் பதிப்பதற்காக, அதனை டிராக்டரில் கொண்டு வந்து பொக்லைன் இயந்தி ரம் மூலம் இறக்கியுள்ளனர்.  அப்போது அருகில் நின்று கொண்டிருந்த நாடியம் கிராமத்தை சேர்ந்த நீலமேகம் (36) என்பவர் மேல் சிமெண்ட் குழாய் தவறி விழுந்ததில் படுகாயமடைந்து, ஆபத்தான நிலையில் பேராவூரணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நீலமேகம் மனைவி  விஜயா அளித்த புகாரின் பேரில் பேராவூரணி காவல்துறை யினர், பொக்லைன் ஓட்டுநர் நாடாகாட்டை சேர்ந்த பன்னீர்  என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இறந்து போன நீலமேகம் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், நான்கு தினங்களுக்கு முன்பு தான் ஊர் திரும்பினார். இந்நிலையில் அவர் உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மளிகைக் கடையில் தீ விபத்து: ரூ.10 லட்சம் பொருட்கள் நாசம்

அரியலூர், மே 31 - அரியலூர் நகரிலுள்ள சின்னகடை தெருவில் சுகுமார்  என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக ஆனந்தா மளிகை என்ற  பெயரில் கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல வியாழனன்று இரவு கடையை  பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். வெள்ளியன்று காலை கடையில் இருந்து புகை வந்தததை பார்த்த  அக்கம் பக்கத்தினர், சுகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.  அவர் கடையை திறந்து பார்த்த போது, கடையில் இருந்த  பொருட்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தன. இதனை யடுத்து அரியலூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரி வித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை யினர் போராடி தீயை அணைத்தனர்.  அதற்குள் கடையில் இருந்த அரிசி, பருப்பு, ஷாம்பு,  சோப்பு, அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட ரூ.10  லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.  இதுகுறித்து அரியலூர் நகர காவல் நிலைய போலீசார்  வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகராட்சிப் பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, மே 31 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக் குட்பட்ட இடத்தில் பிரகாஷ் என்பவர் இயற்கை குளிர்பான  கடை நடத்தி வருகிறார்.  திருத்துறைப்பூண்டி நகராட்சி பொறியாளர் பிரதான்  பாபு, இந்த கடையை காலி செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார். கடையை காலி செய்வது குறித்து, மீன் சங்க  மாவட்டத் தலைவர் எம்.பி.கே.பாண்டியன் கேட்டதற்கு, நகராட்சிப் பொறியாளர் பிரதான் பாபு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பிறகு முரளி மற்றும் எம்.பி.கே.பாண்டியனை அடித்து சட்டையைத் கிழித்துள்ளார். எம்.பி.கே.பாண்டியன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து, நகராட்சிப்  பொறியாளரை கைது செய்ய வேண்டுமென இந்திய தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மிளகாய் விளைச்சல் பாதிப்பு:  விவசாயிகள் கவலை

பாபநாசம், மே 31- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், இதன் சுற்று வட்டாரப்  பகுதிகளான வன்னியடி, இளங்கார்குடி, பட்டுக்குடி  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சுமார் 100 ஏக்கருக் கும் மேல் மிளகாய் பயிர் சாகுபடி நடந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையினால் மிள காய்ச் செடியில் இருந்த பூக்கள் கீழே உதிர்ந்துவிட்டன. சந்தையில் மிளகாய்க்கு நல்ல விலை இருந்த போதிலும்,  மிளகாய் விளைச்சல் இல்லாததால், பாபநாசம்  சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனையடைந் துள்ளனர். மேலும் ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் வரை செலவு  செய்துள்ள நிலையில், போதிய விளைச்சல் இல்லாத தால் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி இருப்பதாக கவலை  தெரிவித்தனர்.  நெல், கரும்பு போன்று மிளகாய் உள்ளிட்ட  தோட்டக்கலை பயிர்களுக்கும், அரசே விலை நிர்ணயம்  செய்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட மிளகாய் பயிர்களை தோட்டக் கலைத் துறையினர் பார்வையிட்டு, மிளகாய் விவசா யிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும்  என கோரிக்கை வைத்துள்ளனர்.

இறந்தவரின் உடலை ஆய்வு செய்யாமல் வழங்க மறுப்பு உறவினர்கள் சாலை மறியல்

தஞ்சாவூர், மே 31-  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அ மிளகாய் விளைச்சல் பாதிப்பு:  விவசாயிகள் கவலை ருகே உள்ள ராவுத்தன் வயல் கிராமத்தைச்  சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (32). இவர் வெளி நாட்டில் வேலை செய்து வந்தார்.  கடந்த இரு மாதத்திற்கு முன்பு விடு முறைக்கு சொந்த ஊர் வந்தவர், மீண்டும் ஜூன் 1 ஆம் தேதி (சனிக்கிழமை) வெளிநாடு  செல்ல தயாராக இருந்த நிலையில், வியாழக் கிழமை அதிகாலை உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக பேராவூரணியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை செய்யப் பட்டு, மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.   அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு வர  ஏற்பாடு செய்தனர்.  அப்போது, புதுக்கோட்டை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தினர்,  உடற்கூறாய்வு செய்த பிறகுதான் உடலை தர  முடியும் என்று கூறியுள்ளனர். அப்படி உடற் கூறாய்வு செய்யாமல், உடலை திரும்பப்  பெற வேண்டும் என்றால், காவல் நிலையத் தில் தடையில்லா சான்றிதழ் பெற்று வர  வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இந்த  தடையில்லாச் சான்றிதழை காவல்துறை யினர் தர மறுத்துவிட்டனர்.  இயற்கையான முறையில் மரணமடைந்த  நிலையில், காவல்துறை சான்றிதழ் தரவும், மருத்துவமனை நிர்வாகம் உடலை தரவும் மறுப்பதால், இறந்தவரது உறவினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடு பட்டனர். மறியலில், பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு பேரா வூரணி வட்டாட்சியர் தெய்வானை, சரக வரு வாய் ஆய்வாளர் யோகச்சந்திரன், முதுநிலை  வருவாய் ஆய்வாளர்கள் கமலநாதன், முத்து கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் கண்ணன், முகமது யாசின், பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கர், காவல்துறை ஆய்வாளர்கள் ஆனந்தராஜ் (சேதுபாவாசத்திரம்), பசுபதி (பேராவூரணி) ஆகியோர் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அதில், உரிய விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் காவல்துறை தடையில்லா சான்று பெற்று, உடற்கூறாய்வு செய்யாமல் உடலை வழங்க அரசுத் தரப்பில் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

கூத்தாநல்லூர் நகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் கோரிக்கை ஏற்பு சாலை மறியல் ஒத்திவைப்பு

திருவாரூர், மே 31 - திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி  ஒப்பந்தப் பணியாளர் களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்த தினக்கூலியை நக ராட்சி நிர்வாகம் வழங்க வில்லை. இதைக் கண்டித்து  மே 31 அன்று கூத்தாநல்லுர் நகராட்சி அலுவலகம் முன்பு  சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என சிஐடியு நக ராட்சி துப்புரவுப் பணியா ளர்கள் சங்கத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கூத்தா நல்லூர் வட்டாட்சியர் அலுவ லகத்தில் வட்டாட்சியர் தலை மையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. சமாதானக் கூட்டத்தில் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர், தஞ்சாவூர் எம்எஸ்ஜி இன்ஃப்ரா (MSG INFRA) நிறுவனத்தின் ஒப்பந்ததாரர், சிஐடியு கூத்தா நல்லூர் மாவட்டச் செயலா ளர் டி.முருகையன், மாவட்டத் தலைவர் எம்.கே. என்.அனிபா, உள்ளாட்சி சங்கத்தின் மாவட்டப் பொரு ளாளர் ரகுபதி, துணைத் தலைவர் சிவசுப்ரமணியன், கூத்தாநல்லூர் நகராட்சி செயலாளர் முருகேசன், தலைவர் சுந்தரமூர்த்தி உள் ளிட்டோர் கலந்து கொண்ட னர். இரு தரப்பு பேச்சு  வார்த்தையில், கூத்தாநல் லூர் நகராட்சியில் பணிபுரி யும் ஒப்பந்த ஊழியர்களிடம் கூடுதலாக பிடித்தம் செய்யப் பட்ட இஎஸ்ஐ தொகை தலா ரூ.5000-ஐ, 5 நாட்களுக்குள் அளிப்பதாக ஒப்பந்ததாரர் உறுதியளித்தார். ஊழியர் களுக்கு தேவையான வாகன வசதிகள், ஓய்வறை அமைத்து தரப்படும் என நகராட்சி ஆணையர் உறுதி அளித்தார். மேலும், ஊழியர் களுக்கு சம்பளத்தை அந்தந்த மாதம் 5 ஆம் தேதிக் குள் வழங்கப்படுவது பின்பற் றப்படும் என ஒப்பந்ததாரர் தரப்பில் ஏற்றுக் கொள்ளப் பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டது.

கும்பகோணத்தில் தொடரும் வாகன நெரிசல் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்படுமா?

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை கும்பகோணம், மே 31- கும்பகோணத்தில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளதால், போக்குவரத்து மாற்றத்தை அமல் படுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் கும்பகோணத்தைச் சுற்றிலும் நவக்கிரக கோவில்கள், பிரதான கோவில்கள் என புகழ் பெற்ற கோவில்கள் நிறைய உள்ளன. அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையும் உள்ளது.  ஆன்மீக தலமாக விளங்கும் கும்ப கோணத்துக்கு, தமிழ்நாடு மட்டு மின்றி பிற மாநிலங்களில் இருந்து  தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.  இவர்களுக்கு சாலை போக்கு வரத்து வசதியாக இருப்பதால், கும்பகோணத்திலிருந்து பல்வேறு  ஊருக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங் கள் இயக்கப்படுகின்றன. வாகனப்  போக்குவரத்து அதிகம் இருப்ப தால், கும்பகோணம் பகுதி எந்நேர மும் பரபரப்பாக காணப்படும். இதனால் கும்பகோணத்தில் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் வாக னங்கள் சென்று கொண்டே இருக்கும், முக்கிய சாலை சந்திப்பு களில் வாகன ஓட்டிகள் விதிமுறை களை பின்பற்றுவதில்லை. இத னால் சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன.  கடந்த ஆண்டு தீபாவளி  பண்டிகையின் போது, கும்பகோ ணத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்தில் சில  மாற்றங்கள் செய்வதாக போலீசார்  தெரிவித்தனர். அதன்படி போக்கு வரத்து மாற்றங்களையொட்டி ஆங்காங்கே இரும்பு தடுப்புகள் அமைத்து, வாகனங்கள் செல்லக் கூடிய பாதைகள் குறித்து அறிவிக்கப் பட்டு 3 மாதங்கள் தொடர்ந்து ஒத்திகை நடைபெற்றது. இந்த போக்குவரத்து மாற்றம்  குறித்து, கும்பகோணம் காந்தி பூங்கா, நால்ரோடு உச்சிப் பிள்ளை யார்கோவில், மகாமக குளம், நாகேஸ்வரன் கோவில் வீதியில்  என பல்வேறு இடங்களில் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதனால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வந்தனர். போக்குவரத்து மாற்றங்கள் அமலுக்கு வராமலே, அனைத்து வாகன ஓட்டிகளும் விதிமுறைகளை பின்பற்றியதால் கும்பகோணம் மாநகராட்சியின் போக்குவரத்து பயண நேரம் குறைந்தது. தற்போது இந்த மாற்றம் ஒத்திகை நிகழ்ச்சியோடு நின்று விட்டது. போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வராததால், வாகன ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற் றுவதில்லை. இதனால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் போக்குவரத்து மாற்றத்தை  கொண்டு வர வேண்டுமென சமூக  ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை  வைத்துள்ளனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில்  மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

திருச்சிராப்பள்ளி, மே 31- திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த நபரின் உடலுறுப்புகள் வியாழக்கிழமை தானம் செய்யப்பட்டன. நாமக்கல் மாவட்டம், வரகூரைச் சேர்ந்த  42 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கு சாலை விபத்தில், தலையில் படுகாயம் ஏற்பட்டது. இவர், திருச்சி கிஆபெவி அரசு  மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மே 28 அன்று சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சையும் பலனளிக்காமல் மே 29  அன்று அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டு, உற வினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து உறுப்புகளை தானம் செய்ய அவர் கள் முன்வந்தனர். இந்நிலையில் உறவி னர்கள், மூளைச்சாவு ஏற்பட்டவரின் கல்லீரல்,  கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் தோல் ஆகிய உறுப்புகளை தானம் செய்தனர்.  அரசு வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்பு  வேண்டி பதிவு செய்தவர்களின் முன்னுரிமை யின்படி, மகாத்மா காந்தி நினைவு அரசு  மருத்துவமனையில் இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த  35 வயது நபருக்கு சிறுநீரகம் வழங்கப்பட்டது. இவை தொடர்பான அறுவை சிகிச்சை கள் திருச்சி அரசு மருத்துவமனையில் வியாழக் கிழமை (மே 30) மருத்துவமனை முதல்வர்  டி.நேரு தலைமையில் மேற்கொள்ளப் பட்டது. முதலமைச்சரின் விரிவான காப்பீட் டுத் திட்டத்தின்கீழ் முற்றிலும் இலவசமாக, மாற்று சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத் தப்பட்டு நோயாளி நலமுடன் உள்ளார். இது, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு  மருத்துவமனையில் நடந்த 27 ஆவது சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது குறிப் பிடத்தக்கது. மற்றொரு சிறுநீரகம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், கல்லீ ரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக் கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. இரண்டு கண்களும் திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற இருவருக்கு தான மாக வழங்கப்பட்டுள்ளது.  உடலுறுப்புகள் தானம் பெறப்பட்ட தையடுத்து உயிரிழந்தவரின் உடலுக்கு திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்  குழுவினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி  செலுத்தினர். பின்பு  மூளைச்சாவு அடைந்தவ ரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.  உடலுறுப்புகளை தானமாக வழங்கிய உறவினர்களுக்கு, பயன்பெற்றவர்கள் தரப்பிலும் மருத்துவர்கள் தரப்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

;