districts

img

3-ஆம் ஆண்டு நினைவு மலரஞ்சலி

பெரம்பலூர், மே 30- திமுக கழக துணைப் பொதுச்செயலா ளர் - முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா.எம்.பி.யின் மனைவி மறைந்த  மு.அ.பரமேஸ்வரி அவர்களின்   3-ஆம்  ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.  கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்பி., அவரது மகள் மயூரி இராசா, போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.சி.சிவசங்கர், தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர். சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகர் (திருவையாறு), வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), சாக்கோட்டை அன்பழ கன் (கும்பகோணம்), எம்.பிரபாகரன் (பெரம்பலூர்), சீ.கதிரவன் (மண்ணச்ச நல்லூர்), கு.சின்னப்பா (அரியலூர்), பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பா ளர் வீ.ஜெகதீசன், வேலூர் ஊராட்சி  மன்ற தலைவர் அம்பிகை சிவசண்முகம், கொளக்காநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் என்‌.ராகவன் மற்றும் பல்வேறு மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.