districts

திருச்சி முக்கிய செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே  கோவில் நகைகள் கொள்ளை

அரியலூர், மே.13- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேலக்குடி யிருப்பு பகுதியில் அமைந்துள்ளது திரௌபதி அம்மன் கோவில். கோவில் பூசாரி கொளஞ்சிநாதன் திங்களன்று காலை கோவிலை திறக்க வந்துள்ளார். அப்போது சாமியின் கழுத்தில் போடப்பட்டிருந்த சுமார் பத்து லட்சம் மதிப்பிலான தாலி செயின், தங்க காசு அடங்கிய 17 பவுன் செயின் மற்றும் வெள்ளிப் பொருட்கள் காணாதது கண்டு  அதிர்ச்சி அடைந்தார்.  இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல்துறையி னருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கோவிலை சுற்றி கம்பி வேலி போடப்பட்டிருந்த நிலையில் தண்ணீர் செல்வதற்காக போடப்பட்ட பைப் குழாயின் வழியாக உள்ளே வந்த நபர்கள் சாமியின் கழுத்தில்  போடப்பட்டிருந்த நகையை திருடி சென்றிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது மேலும் கோவில்  முன்னாள் பூசாரி சிவக்குமார் மற்றும் தற்போதைய பூசாரி கொளஞ்சிநாதன் ஆகியோரிடம் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமை யிலான தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். 

லாரி மோதி ஓட்டுநர் பலி

அரியலூர், மே 13- அரியலூர் அருகே லாரி மோதி மற்றொரு லாரி ஓட்டுநர் உயிரிழந்தார். கரூரைச் சேர்ந்தவர் சங்கர்(35). லாரி ஓட்டுநரான இவர், ஞாயிற்றுக்கிழமை அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவில் கிராமத்திலுள்ள தனியார் சிமென்ட் ஆலைக்கு லாரியில் கரி ஏற்றி வந்துள்ளார். அதனை ஆலையில் இறக்கிவிட்டு கொல்லாபுரம் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு வெளியே சென்றார்.  மீண்டும் வந்து லாரியில் ஏற முற்பட்டபோது, மற்றொரு தனியார் ஆலையிலிருந்து சிமென்ட் ஏற்றி வந்த லாரி இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சங்கர் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் காவல் துறையினர், சடலத்தை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிமென்ட் லாரியை ஓட்டி வந்த நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த கருணாநிதி(43) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாய் கடித்து சிறுமி காயம் உரிமையாளர் மீது வழக்கு பதிவு

பதிருச்சிராப்பள்ளி, மே 13- திருச்சி உறையூர் பாத்திமாநகர் பகுதியைச் சேரந்தவர் முகமது ஹிதாயத்துல்லா (வயது37). இவரது மனைவி சல்மா (வயது31), மகள் தல்பியா(வயது7). சனிக்கிழமையன்று டியூஷனில் இருந்து தல்பியாவை அழைத்துக்கொண்டு, சல்மா வீட்டுக்கு நடந்துசென்று கொண்டிருந்தார்.  அப்போது, அவரது வீட்டின் எதிர்வீட்டில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த ஜெர்மன் செப்பர்ட் வகை வளர்ப்பு நாய், திடீரென சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடி வந்து, சிறுமி தல்பியாவை கடித்துக் குதறியது. இதில் உடலில் பல இடங்களில் காயமடைந்த சிறுமி, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், வளர்ப்பு நாயின் உரிமையாளரான செந்தில்குமார் மீது உறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் வீடற்றோருக்காக மேலும் 3 தங்கும் விடுதிகள்

திருச்சிராப்பள்ளி, மே 13- திருச்சி மாநகராட்சியில், ஆதரவற்றோருக்காக மேலும் 3 இரவு தங்கும் விடுதிகள் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி மாநகரில் ஆதரவற் றோர் மற்றும் வீடற்ற நபர்கள் சாலையோரங்களிலும் பாலங் களுக்கு அடியிலும் தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இன்னும் சிலர் சாலை மையத் தடுப்புகளில் இரவு நேரங்களில் படுத்துறங்கி வருகின்றனர்.  இவற்றைக் கருத்தில் கொண்டு திருச்சியில் 3 இடங்களில் ஆதரவற் றோர் தங்கும் விடுதிகள் உணவு வசதியுடன் அமைக்கப் பட்டுள்ளன. அவற்றில் புதிதாக வருவோருக்கு இடம் ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து மேலும் 3 இடங்களில் இரவு தங்கும் விடுதிகள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து ள்ளது. இதற்கென ரூ. 1 கோடியில் திருவெறும்பூர், உறையூர், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். அவற்றில் உணவுக்கூடம், சமையலறை, தங்குமிடம், சுகாதார வளாகம் மற்றும் தியான மண்டபம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.  இதில் மனநலம் பாதிக்கப்பட்டோர், நோய் வாய்ப்பட்டோர் தங்க இயலாது. நல்ல முழு ஆரோக்கியத்துடனும் மன நலம் பாதிக்காத நிலையிலும் உள்ள ஆதரவற்றோர், வீடற் றோர் மட்டுமே இவற்றில் இரவு  நேரங்களில் மட்டும் தங்க முடியும். தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததும், இதற்கென தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களில் இரவு நேர தங்கும் விடுதிகள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். திருச்சியில் ஏற்கெனவே, ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே பாரதியார் சாலை, கோட்டை பகுதியில் கீழரண்சாலை, மதுரை சாலை உள்ளிட்ட இடங்களில் தலா 50 பேர் தங்கும் வகையில் விடுதிகள் உள்ளன. அவை பராமரிப்புகளுக்காக சில சமூக நல (என்ஜிஓ) அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. அவற்றுக்கென பிரத்யேகமாக பணியாளர்கள், பாதுகாவலர்கள் மற்றும் கண்காணி ப்பு கேமரா வசதிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.  இவற்றுள் சிலர் நீண்டகாலமாக தங்கியிருப்பது குறித்த புகார்களைத் தொடர்ந்து, இரவு தங்குமிடங்களின் செயல்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் முறைப்படுத்தியது. இந்நிலையில் இவற்றுக்கு புதிதாக தங்க வருவோருக்கு இடமளிக்க முடியாத சூழலும் நிலவுகிறது. பலர் அவற்றில் நிரந்தரமாக தங்கியிருப்பதால் இந்நிலை ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.