கும்பகோணம், ஜூலை 17-
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா ஓகை கிராம நிர்வாக அலுவலராக முத்துகுமார் பணியாற்றி வரு கிறார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் உள்ள பாரதி நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.
இவர் நாச்சியார்கோவிலில் புது வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் பெற்று எடுத்து வரப்பட்ட ஒரு லட்ச ரூபாய் ரொக்கத்தையும், தனது தங்கையிடம் அடகு வைப்பதற்காக வாங்கி வரப்பட்ட 20 பவுன் நகையை யும் வீட்டின் பீரோவில் வைத்துள்ளார். பின்னர், புதுமனை புகுவிழாவிற்கு பத்திரிகை வைக்க கோயிலுக்கு சென்று விட்டு, இரவு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்தார். இதில் ரூபாய் ஒரு லட்சம் ரொக்கம், 20 பவுன் நகை மற்றும் சில்லறை நகைகளை மர்ம நபர்கள் கொள் ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நாச்சி யார்கோவில் காவல் நிலையத்தில் முத்துகுமார் புகார் அளித்தார்.