districts

img

தஞ்சாவூர் அருகே ரூ.13 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்

தஞ்சாவூர், ஜூன் 22-  

     தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கார்கா வயல் ஊராட்சியில் மகாராஜசமுத்திரம் காட்டாற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம்  கட்டப்பட்டு வருகிறது.

     இந்த பாலம் 472 அடி  நீளமும் 34 அடி அகலமும் கொண்ட உயர்  மட்டப் பாலம் ஆகும். இந்த பாலத்தை தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை திட்டங்கள் அலகு மூலமாக சுமார் ரூ.13 கோடி செல வில் கட்டப்பட்டு வருகிறது.  முன்பிருந்த இந்த மகாராஜசமுத்திரம் காட்டாற்றின் பாலம் அடிப்பகுதியில் காங்கி ரீட் தளங்கள் பெயர்ந்து, தண்ணீர் வழிந்தோ டும் குழாயை அடைத்துக் கொண்டிருந்த தால், மழை காலங்களில் வெள்ளப் பெருக்  கெடுத்து வரும்போது, காட்டற்று பாலத்தின்  மேற்பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்று கொண்டிருந்தது.  

    இதனால் போக்குவரத்து நிறுத்தப் பட்டிருந்தது. மேலும் பட்டுக்கோட்டையில் இருந்து தொண்டி, இராமநாதபுரம், தூத் துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதி களுக்கு செல்வதற்கு இந்த வழியாக சென்று பிறகு இசிஆர் சாலையில் செல்ல வேண்டும். இந்த வழித்தடத்தில் முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக் கப்பட்டது.  

   எனவே மகாராஜசமுத்திரம் காட்  டாற்றில் உயர்மட்டப் பாலம் கட்ட வேண்டும்  என்று கார்கா வயல், கோட்டாகுடி, பண்ண வயல், கூத்தாடிவயல், கொண்டிகுளம் பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் பல முறை கோரிக்கை வைத்தனர்.  

    இதையடுத்து பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை முன்  முயற்சியைத் தொடர்ந்து, தமிழக நெடுஞ்  சாலை துறை திட்டங்கள் அலகு மூலமாக,  இந்த உயர்மட்டப் பாலம் மகாராஜ சமுத்திரம் காட்டாற்றில் கட்டப்பட்டு வரு கிறது. இந்த பாலம் விரைவில் கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்  கின்றனர்.