districts

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.34 கோடி முறைகேடு

சிவகங்கை, மே 20- சிங்கம்புணரி ஒன்றிய  அலுவலகத்தில் ஊராட்சி களுக் கான நிதிக்குழு  மானிய நிதியில் ரூ.1.34 கோடி முறைகேடு குறித்து  போலீசார் விசாரிக்கின்றனர். மத்திய அரசின் நிதிக்  குழு மானிய நிதி ஊராட்சி களுக்கு நேரடியாக ஒதுக் கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சாலை, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இந்நிலையில் சிவ கங்கை மாவட்டம், சிங்கம்பு ணரி ஒன்றியத்தில் கடந்த 2020- 21-ஆண்டு முதல் ஊராட்சிகளுக்கு ஒதுக்கப் பட்ட 14-வது மற்றும் 15-வது  நிதிக்குழு மானிய நிதியில் முறைகேடு நடந்திருப்பது அதிகாரிகள் ஆய்வில் தெரி யவந்தது. ஊராட்சிகளுக்கு ஒதுக்  கப்படும் நிதியை எடுக்க ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கு ‘டிஜிட்டல் கையொப்பம்’ அட்டைகள் கொடுக்கப்பட் டன. அந்த அட்டையை பயன் படுத்தியே தலைவர்கள், துணைத் தலைவர்கள் ஒப்பந்ததாரர்களின் வங்கி கணக்குகளுக்கு பணத்தை விடுவித்து வருகின்றனர். ஆனால் ‘டிஜிட்டல் கையொப்பம்’ அட்டையை பயன்படுத்த தெரியாத சிங்கம்புணரி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சித் தலை வர்கள், துணைத் தலை வர்கள் சிலர், ஒன்றிய அலு வலகத்தில் பணிபுரிந்த தற்  காலிக கணினி இயக்குபவ ரிடம் கொடுத்து வைத்திருந்த னர். அந்த கணினி இயக்கு பவர் அந்த அட்டைகளை பயன்படுத்தி ஒப்பந்ததா ரர்களுக்கு அனுப்ப வேண்  டிய நிதியை, வேறு வங்கிக் கணக்குக்கு அனுப்பி முறை கேடு செய்துள்ளார். இதன்  மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1.34 கோடி வரை முறை கேடு நடந்துள்ளதாக கூறப் படுகிறது.  இது குறித்து மாவட்ட  காவல் கண்காணிப்பாளரி டம் ஒன்றிய அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். மாவட் டக் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் மாவட்ட ஆட்சிய ரின் உத்தரவின் பேரில் ஆட்சியரின் நேர்முக உதவி  யாளர் (கணக்கு), ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் உள் ளிட்டோர் அடங்கிய மூவர்  குழுவும் விசாரித்து வரு கிறது. இதனிடையே மற்ற  ஒன்றியங்களிலும் இது போன்ற முறைகேடு நடந்துள் ளதா என்பது குறித்து ஊரா ட்சிகளின் உதவி இயக்குநர் தலைமையிலான அதிகாரி கள் விசாரித்து வருகின்ற னர். இதுகுறித்து ஊரக  வளர்ச்சித் துறை அதிகாரி களிடம் கேட்டபோது, “சிங் கம்புணரி ஒன்றியத்தில் 13 ஊராட்சிகளுக்கான நிதியில் முறைகேடு நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுபோன்று மற்ற ஒன்றியங்களில் முறை கேடு நடக்கவில்லை. எனி னும், தொடர்ந்து விசாரணை  நடந்து வருகிறது” என்றனர்.

;