districts

img

திண்டுக்கல்லில் பழங்குடியின மக்கள் காத்திருப்புப் போராட்டம்

திண்டுக்கல், நவ.23 பழங்குடி மக்களின் குழந்தைகளு க்கு சாதிச்சான்றிதழ் கால தாமதமின்றி வழங்க வேண்டும். இலவச வீட்டடி மனை, இலவச பட்டா வழங்க வேண்டும். கேரள மாநிலத்தைப் போல பழங்குடி மக்களுக்கு ரூ.6 லட்சம் செலவில் வீடு கட்டித்தர வேண்டும். என்.புதுப்பட்டியில் உண்டு உறைவிடப் பள்ளி தொடங்க வேண்டும். கே.சி.பட்டி கூட்டப்பாறை ஆதி வாசி மக்களுக்கான இடுகாட்டுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும், வன  உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டு மென வலியுறுத்தி திண்டுக்கல் கோட் டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பாக காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.  

போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.செல்லையா தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் காளியப்பன், சட்டமன்ற முன்னாள்  உறுப்பினர் கே.பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல்  மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.பெரு மாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.குண சேகரன் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நிலக்கோட்டை ஒன்றி யச் செயலாளர் எஸ்.ஆர்.சௌந்திர ராஜன், விவசாயிகள் சங்க உதவிச் செயலாளர் எம்.காசிமாயன்,  குருசாமி, சேவுகப்பெருமாள், குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  

வழிக்கு வந்த அதிகாரிகள்

போராட்டத்தையொட்டி 52 பழங்குடி மாணவர்களுக்கான சாதிச்சான்றிதழ் வருகிற ஐந்தாம் தேதி வழங்கப்படும்.  மற்ற கோரிக்கைகளை உடனடியாக நிறை வேற்றித் தருவதாக  உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. 

;