districts

img

4.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோரை நேரில் சந்தித்து ஆர்.சச்சிதானந்தம் நன்றி தெரிவித்தார். அவருக்கு அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர். உடன் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், கே.பாலபாரதி, என்.பாண்டி உள்ளிட்டோர் இருந்தனர்.

திண்டுக்கல், ஜூன் 4- திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  வேட்பாளர் ஆர். சச்சிதானந்தம் வெற்றி பெற்றார். நான்கரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி  வேட்பாளரை வீழ்த்தினார்.  திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை  வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தபால் வாக்கு எண்ணிக்கையில் இருந்து மின்னணு வாக்கு எண்ணிக்கை வரை ஒவ்வொரு சுற்றிலும் சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார். 26 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் 6 லட்சத்து 70 ஆயிரத்து 149 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக கூட்டணி எஸ்டிபிஐ வேட்பாளர் முபாரக் அலி 2 லட்சத்து 26 ஆயிரத்து 328 வாக்குகள் பெற்றார் .பாஜக கூட்டணி பாமக வேட்பாளர் திலகபாமா 1 லட்சத்து 12 ஆயிரத்து 503 வாக்குகள் பெற்றார்.

 அதிமுக கூட்டணி வேட்பாளரை விட சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம்  4 லட்சத்து 43 ஆயிரத்து 821 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.  மொத்தம் பதிவான வாக்குகள் 11 லட்சத்து 43 ஆயிரத்து 187 ஆகும்.  

ஆர்.சச்சிதானந்தத்தின் வெற்றியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திமுக கூட்டணிக்கட்சியினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

;