districts

img

திருக்கல்யாணத்திற்கு 21 தட்டுக்களில் சீர் வரிசை மீனாட்சியின் வீட்டாராக மாறிய இஸ்லாமியர்கள்

திண்டுக்கல். மே 21 - இந்தியாவில் மத நல்லிணக்கத்திற் கும் சகோதரத்துவத்திற்கும் முன் னோடியாக திகழும் மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. தமிழ்நாட்டில் இந்து-  முஸ்லிம்- கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும்  ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். கடவுள்கள், மதங்கள் வேறு வேறாக இருந்தாலும், மத வேறுபாடின்றி, ஒரு குறிப்பிட்ட மதத்தின் விழாக்களில் ஏனைய மதத்தவரும் கலந்து கொள்வது காலம் காலமாக பேணிக்காக்கப்பட்டு வரும் பண்பாடாக இருந்து வருகிறது.

அந்த வகையில், இரண்டு நாட் களுக்கு முன்பு, அரியலூர் மாவட்டம் நடுவலூரில், கிறிஸ்தவ பாதிரியார் களின் முன்னிலையில் நடைபெற்ற கோயில் குடமுழுக்கு பலரின் பாராட்டுக் களை பெற்றிருந்தது.

இந்நிலையில், திண்டுக்கல் ரவுண்ட்  ரோடு புதூர் ஸ்ரீ சக்தி சந்தான கணேசர் கோயிலில் வருட அபிஷேகம் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல் யாணத்திற்கு இஸ்லாமியர்கள் சீர் கொண்டு வந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, இஸ்லாமிய பெரு மக்கள், ரவுண்ட் ரோடு புதூர் ஜூம்மா  மஜித் பள்ளிவாசல் தலைவர் இஸ்மா யில் தலைமையில், மணமகள் (மீனாட்சி) வீட்டாராக இருந்து பூமாலை, வளையல், பட்டுச்சேலை, பழங்கள் உட்பட 21 வகை சீர் தட்டு  கொண்ட சீர்வரிசையை திருக்கல் யாணத்திற்கு அளித்துள்ளனர். 

திண்டுக்கல் மாநகராட்சியின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது ரவுண்ட் ரோடு புதூர். இந்த பகுதி யில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் பெரும்பான்மையாக வாழ்ந்து வரு கின்றனர். அந்த வகையில், கோயில் விழாக்களில் இஸ்லாமியர்களும், மசூதி நிகழ்ச்சிகளில் இந்துக்களும் கலந்து கொள்வது வழக்கமாக உள்ளது. மேலும் “குடும்ப நிகழ்ச்சிகளி லும் இரு தரப்பை சேர்ந்தவர்களும் குடும்பத்துடன் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் தான் தற்போது இந்த நிகழ்ச்சிக்கும் சீர் கொண்டு வந்ததாக” இஸ்லாமியர்கள் கூறுகின்றனர்.

அதேபோல “நாங்கள் இஸ்லா மியர்கள் இந்துக்கள் என்று பிரித்துப் பார்ப்பது கிடையாது.. சகோதரர்கள் என்ற ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம்.. அதன் காரணமாகத்தான் நாங்கள் உரிமையுடன் (இஸ்லா மியரிடம்) சீரைக் கேட்டு பெற்று இருக்கிறோம்” என்று இந்துக்களும் கூறியிருக்கின்றனர்.

முன்னதாக திருக்கல்யாண விழா வை ஜே.சி.அறக்கட்டளை தலைவர் தனபால் தலைமையில் ஊர் நிர்வாகிகள் செய்திருந்தனர். ஜூம்மா மசூதி பள்ளி வாசல் செயலாளர் முகமது ரபீக், பொருளாளர் முகமது ஹவுஸ்,  கவுன்சிலர் முகமது சித்திக், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பசீர் அகமது, காண்ட்ராக்டர் வெள்ளைச் சாமி, ஷாஜகான் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.