districts

பூஸ்டர் தொழில் நுட்பம் குறித்து மரவள்ளி விவசாயிகளுக்கு ஆலோசனை

தருமபுரி, மே 18-

மரவள்ளி உர நிர்வாகம் மற்றும் பூஸ்டர் தொழில்நுட்பம் குறித்து வேளாண் அறிவியல் நிலையம் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் ஸ்ரீவித்யா, வெண் ணிலா,சிவகுமார் ஆகியோர் தெரி வித்திருப்பதாவது, மரவள்ளி தமிழ் நாட்டில் சேலம், நாமக்கல், தருமபுரி, விழுப்புரம், கன்னியாகுமரி, திருச்சி, கடலூர்,பெரம்பலூர் மாவட்டங்க ளில் 1.20 லட்சம் ஹெக்டேரிலிருந்து 41.63 லட்சம் டன் கிழங்குகள் உற் பத்தி செய்யப்படுகின்றன. இயற்கை  உரம் இறவைப் பயிருக்கு ஹெக்டே ருக்கு 25 டன்னும், மானாவரிப் பயி ருக்கு ஹெக்டேருக்கு 12.5 டன்னும் அடியுரமாக இட வேண்டும்.ஒரு கொள்கலனில் 40 கிலோ மாட்டு சாணத்தை 100 லிட்டர் நீரில் கலந்து வடிகட்டிய பின் இத்துடன் மர வள்ளி பூஸ்டர் பையிலுள்ள பை-1 மற்றும் பை-2 கலவையை நன்றாக கலந்து ஒரு சாக்கு கொண்டு மூடி இறுக கட்டி பத்து நாட்கள் கொதிக்க விடவும், இடையில் மூன்று நாட்க ளுக்கு ஒரு முறை கலவையை மீண் டும் கட்டி வைக்கவும். பத்து நாட்கள் கழித்து நொதித்த கலவையை வடி கட்டவும். இத்துடன் மூன்றாம் கலவையை சேர்த்து தேவையான அளவு நீர் கலந்து 200 லிட்டர் கரைசல் ஆக்கி மர வள்ளியில் மாலை வேளையில் இலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும். ஒரு பை மர வள்ளி பூஸ்டர் ஒரு முறை தெளிப்ப தற்கு ஒரு ஏக்கருக்கு பயன்படுத்த வும்.

மரவள்ளி நடவு செய்து இரண் டாம், மூன்றாம், நான்காம் மாதங்க ளில் மூன்று முறை தெளிக்கவும், மர வள்ளி பூஸ்டரை எந்த பூச்சி அல்லது பூஞ்சாண மருந்துகளுடன் கலக்க கூடாது. காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண் டும். தெளித்தவுடன் நீர் பாய்ச்ச வேண் டும். ஆறு மாதத்திற்குள் பயன்ப டுத்த வேண்டும். மரவள்ளி பூஸ்டரை சேலத்தி லுள்ள ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் வாங்கி பயன்பெறலாம்.மேலும், தொடர்புக்கு திட்ட ஒருங்கிணைப்பா ளர் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறி வியல் நிலையத்தை அணுக வேண் டும் என தெரிவித்தனர்.