districts

img

சிதலமடைந்த சாலையை செப்பனிட பொதுமக்கள் வலியுறுத்தல்

தருமபுரி, டிச. 6-  தருமபுரி நால்ரோடு டிஏஎம்எஸ் காலனிக்கு செல்லும் சாலையை செப்பனிட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி நால் ரோடு சிக்னல் அருகே பாதாள சாக்க டையில் அடைப்பை சீர் செய்ய தருமபுரி நகராட்சி ஊழியர்க ளால் கடந்த ஒரு வாரத்திற்கு முன் 10 அடி தூரத்திற்கு  குழி தோண்டப்பட்டது. சாக்கடை அடைப்பை சரி செய்த ஊழி யர்கள், இதன்பின்னர் தோண்டப்பட்ட சாலையை சீர மைக்காமல் மண்ணை இழுத்து மூடிவிட்டனர். இந்நிலை யில், தற்போது பெய்து வரும் மழையால் அந்த பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டி கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, பெரிய விபத்து ஏற்படும் முன் சிதலமடைந்த சாலையை உட னடியாக செப்பனிட வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.