தருமபுரி, டிச. 12- தருமபுரி மாவட்டம், தொப்பூர் கனவாயில் அடுத்த டுத்த 15 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். தருமபுரி மாவட்டம், சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தெப்பூர் கன வாயில்சனிக்கிழமையன்று மதியம் சேலம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் பாரதவிதமாக கார் விபத்துக்குள்ளானது. இதைய டுத்து காவல்துறையினர் அனைத்து வாகனங்களை யும் ஒழுங்குபடுத்தி அனுப்பி வைத்துக் கொண்டி ருந்தனர்.
அப்போது சேலம் நோக்கி அதிக வேகமாக வந்த லாரி ஒன்று அச்சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதி சென்று பாலத்தின் மீது நின்றது. இவ் விபத்தில் 12கார் இரண்டு மினி லாரி,ஒரு மோட்டார் பைக் உள்ளிட்ட வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதிக்கொண்டது. இதில் மொத்தம் 15 வாகனங் கள் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலியே 4 பேர் உயிழந்தனர். படுகாயமடைந்த 5க்கும் மேற்பட்டோர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடுத் தடுத்து 15 வாகனங்கள் விபத்துக்குள்ளாதில் சேலம்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து பாதிக்கப்பட் டது.