தஞ்சாவூர், மே 9 - தஞ்சாவூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.7 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி களை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 425 மனுக்களை பொது மக்கள் ஆட்சியரிடம் வழங்கினர். பின்னர் மாவட்ட ஆட்சியர், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் பரிந்துரையின் பேரில், தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் நடை பெற்ற “தீராக்காதல் திருக்குறள் குறளோவியம்” போட்டி யில் வெற்றி பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் 18 மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் செயல்பட்டு வரும் செயற்கை அவயம் மையம் மூலம் தயாரிக்கப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான நவீன செயற்கை கால்கள் 7 பேருக்கும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒரு பயனா ளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரியில் இயங்கக் கூடிய சக்கர நாற்காலியினையும், வருவாய்த் துறை யின் சார்பில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும் வழங்கினார்.