தஞ்சாவூர், ஜூலை 3 - தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் (B.Ed.,) இரண்டாண்டு முழு நேரப் பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் நிறைஞர் (M.Ed.,) இரண்டாண்டு முழு நேரப் பட்டப்படிப்பிற்கு 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான நேர டிச் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஜூலை 31.
சேர்க்கை விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வி யியல் மற்றும் மேலாண்மையியல் துறை யில் நேரிலும், தமிழ்ப் பல்கலைக்கழக இணைய வழியாகவும் பெற்றுக் கொள்ள லாம். சேர்க்கைக்கு ஒரு சில இடங்களே எஞ்சி உள்ள நிலையில் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளமான www.tamiluniversity.ac.in என்ற முகவரியிலும், 04362-226720 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என பதிவாளர் (பொறுப்பு) சி.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.