districts

img

மாவீரர் பகத்சிங் பிறந்தநாள் நிகழ்ச்சி

தஞ்சாவூர், செப்.29- சுதந்திரப் போராட்ட தியாகி, மாவீரர் பகத்சிங் கின் 115 ஆவது பிறந்த தினத்தையொட்டி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கொடியேற்றி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது.  ஒரத்தநாட்டில், வாலிபர் சங்கம் மற்றும் இளைஞர் பெருமன்றம் சார்பில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு, இளை ஞர் பெருமன்றத்தின் மாவட் டச் செயலாளர் காரல் மார்க்ஸ்,  வாலிபர் சங்க ஒன்றியப் பொரு  ளாளர் ஆனந்தராஜ் ஆகி யோர் தலைமை வகித்தனர்.   தமுஎகச மாநில துணைப் பொதுச்செயலாளர் களப பிரன் சிறப்புரையாற்றினார். சுதந்திர பாரதி, பெர்னாட்ஷா, அரவிந்த் உள்ளிட்ட ஏராள மான இளைஞர்கள் கலந்து கொண்டனர். அம்மாபேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்க ஒன்றியச் செய லாளர் உ.சரவணன் தலை மை வகித்தார். ஒன்றியப் பொருளாளர் ஆர்.ராமச் சந்திரன், சிபிஎம் நகரச் செய லாளர் வி.ரவி,  நிர்வாகிகள் பி.வாசுதேவன், ஸ்டீபன்,  எஸ்.சிவகுமார், சி.விஜய ராஜன், பி.சிவகுமார், ஆர்.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.