தஞ்சாவூர், செப்.22- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூர ணியில் ஜே.ஸி.கே சிபிஎஸ்இ வித்யா லயா பள்ளி, லயன்ஸ் கிளப் இணைந்து சர்வதேச அமைதி தின விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் சிந்து தலைமை வகித்தார். லயன்ஸ் தலைவர் செ. ராமநாதன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர், லயன்ஸ் மாவட்டத் தலைவர் எஸ்.கே.ராமமூர்த்தி ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்த னர். பேரணி பள்ளி வளாகத்தில் தொடங்கி, ஸ்ரீநீலகண்டப் பிள்ளையார் கோயில் வழியாக, புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று திரும்பியது. தொடர்ந்து, சர்வதேச அமைதி தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாணவர்களுக்கு பேச்சு, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.