தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு, வள்ளலார் சன்மார்க்க மன்றத்தின் சார்பில், குறைந்த கட்டணத்தில் உணவு வழங்கும் வகையில், அட்சயப் பாத்திரத் திட்டம் தொடக்க விழா நடந்தது. பல்கலை. துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை வகித்தார். சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்விருக்கை பொறுப்பாளர் மஞ்சுளா, திருவெண்காடு வள்ளலார் தமிழ் மன்றத் தலைவரும், இ.எஸ்.ஐ., இயக்குநர் டாக்டர் ஜெயராஜமூர்த்தி துவக்கி வைத்தார். பல்கலை கழக பதிவாளர் தியாகராஜன், நிகழ்வில் “வள்ளலார் கண்ட சாகாக்கலைத் தத்துவம்” என்ற நூல் வெளியிடப்பட்டது.