districts

img

நாய்கள் கண்காட்சி

தஞ்சாவூர், மார்ச் 11-  தஞ்சாவூர், மாதாகோட்டை பகுதியில் உள்ள மிருக வதை தடுப்பு சங்கத்தில், கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து, நாய்கள் கண்காட்சியினை நடத்தின.  கண்காட்சியை, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்தார். இதில், சிம்பா, அலங்கு, டாபர்மேன், லேபர்டாக், கிரேடன், ஜெர்மன் ஷெப்பர்ட், சிப்பிப் பாறை, லேபரடார்,ஜெர்மன் ஷெப்பர்ட், கோம்பை, போலீஸ் மோப்ப நாய்கள் உள்ளிட்ட 200  வகையான நாய்கள் பங்கேற்றன. மேலும், கண்காட்சி யில் அரியவகை பறவைகள், பெரிய அளவிலான ஓணான், சிலந்தி, பாம்பு உள்ளிட்ட வளர்ப்பு பிராணி களும் இடம்பெற்றன.   விழாவில், கால்நடைத்துறை மண்டல இணை இயக்கு நர் தமிழ்ச்செல்வன், மிருகவதை தடுப்பு சங்க அலுவல் சாரா உறுப்பினர்கள் எட்வர்ட் ஆரோக்கியராஜ், ஆசிப் அலி, விஜயலெட்சுமி பாரதி, சதீஸ்குமார், ஆடிட்டர் ராகவி, மரு.ரவிசந்திரன், ரெட் கிராஸ் துணைத் தலைவர் முத்துக்குமார், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மன்ற  தலைவர் சத்தியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.