districts

கடலூர் உதவி ஜெயிலர் குடும்பத்தினரை எரிக்க முயன்ற வழக்கு: 3 பேர் சரண்

தஞ்சாவூர், செப்.7 -  கடலூரில் உதவி ஜெயிலர் குடும்பத்தி னரை தீ வைத்து எரிக்க முயன்ற சம்பவத் தில் தொடர்புடைய 3 பேர் செவ்வாய்க்கிழமை  பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் சரண டைந்தனர். கடலூர் மாவட்டம் சிறைத்துறை அதிகாரி களின் குடியிருப்புகளில் உள்ள சிறை அலுவ லர் மணிகண்டன் வீட்டில் கடந்த ஆகஸ்ட் 28  ஆம் தேதி நள்ளிரவு பெட்ரோல் ஊற்றி தீ  வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கடலூர் மத்திய சிறை யில் அடைக்கப்பட்டிருக்கும் தனசேகரன் சிறையிலிருந்தபடியே திட்டமிட்டு மணி கண்டன் வீட்டில் கூலிப்படை மூலம் தீ வைத்தது தெரிய வந்தது. குறிப்பாக மணிகண்டன் வீட்டில் தீ  வைக்க, கைதி தனசேகரனுக்கு உதவியாக சிறைச்சாலையில் பணிபுரியும் சிறைக் காவ லர் செந்தில்குமார், தினேஷ், திருச்சி அருகே  திருவெறும்பூரில் பதுங்கி இருந்த கைதி தனசேகரனின் தம்பி மதிவாணன், மவுலி தரன் ஆகிய நான்கு பேர் ஏற்கனவே கைது  செய்யப்பட்டனர். இந்நிலையில் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தனசேகரனின் ஆட்களான, திருவள்ளூரைச் சேர்ந்த மனோ  என்கிற மணவாளன்(28), கார்த்தி (23), இளந்தமிழன்(23) ஆகிய 3 பேரும் செவ்வாய்க்கிழமை பட்டுக்கோட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சத்யா முன்பு  சரணடைந்தனர். இதையடுத்து 3 பேரையும் இரண்டு நாட்கள் தஞ்சாவூர் சப்-ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின்பு கடலூர்  காவல்துறையினர் அவர்களை கஸ்டடியில் எடுத்து, கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவர் என காவல்துறை தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.