தஞ்சாவூர், செப்.19 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினரும், ஓய்வு பெற்ற அரசு ஊழியரு மான ரெ.ஞானசூரியன்-நிர்மலா தம்பதியின் 28 ஆவது திருமண நாளை முன்னிட்டு, தனது குடும்பத்தின் சார்பில், ரூ.50 ஆயிரத்திற் கான காசோலையை, அவரது மனைவி நிர்மலா, மகள் சுபாங்கி, மகன் லெனின் ஆகி யோருடன் சிபிஎம் அலுவலகம் வந்து, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோ.நீல மேகம், ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி ஆகியோரிடம் வழங்கினார். அப்போது, அண்ணா குடியிருப்பு சிபிஎம் கிளை செயலா ளர் பாலகிருஷ்ணன், கோர்ட் அண்ணாதுரை, கரம்பயம் தங்கராஜ் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.