கும்பகோணம், செப்.12 - மகாகவி பாரதி 101 வது நினைவு நாளையொட்டி தமு எகச நாச்சியார்கோயில் கிளை சார்பில் கிளைத் தலைவர் சு.சரவணன் தலைமை யில் பாரதியார் உருவப்படத் திற்கு மலர் அஞ்சலி செலுத் தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்திற்கு கிளைத் தலை வர் சு.சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின் பாரதி, கிளை செயலாளர் கவிஞர் கிருபா கரன், பொருளாளர் பார்த்திபன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். திருவிடைமரு தூர் தெற்கு ஒன்றியம் நாச்சியார்கோயில் பகுதியில் தமுஎகச கிளை சார்பில் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி பாரதியார் பிறந்த நாள் அன்று அவருக்கு சுமார் ரூ.2 லட்சம் மதிப்பில் வெண்கல சிலை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.