தஞ்சாவூர், செப்.4 - மூடநம்பிக்கை வதந்தியால் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட அங்கன்வாடிக் கட்டிடம், திறக் கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி செந்தமிழ் நகர், நரிக்குறவர் குடியிருப்பில் பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியின் கீழ் கடந்த 2016 - 17 ஆம் ஆண்டில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந் தராசு, நிதி ஒதுக்கீட்டில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அப் போதைய சட்டமன்ற உறுப்பின ரால் திறக்கப்பட்டது. தற்போது 5 ஆண்டுகளை கடந்த நிலையில், இதுவரை அங்கன் வாடி கட்டிடம் செயல்படாமல் உள்ளது. அங்கு அங்கன்வாடி கட்டி டம் இருப்பது குறித்தும், மையம் செயல்படுகிறதா என்பது குறித்தும் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள உயர் தொடக்க நிலை மாண வர்களுக்கான இல்லம் தேடி கல்வி மையம் இங்கு செயல்பட்டு வந்து, தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த அங்கன்வாடி கட்டிடத்திற்கு இது வரை மின் இணைப்பு வசதி வழங்கப் படாமல் உள்ளது. தற்போது அங்கன் வாடியும் செயல்படாமல், இல்லம் தேடி கல்வி மையமும் செயல்படா மல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மையத்தில் பேய், ஆவி நடமாட்டம் உள்ளதாக சமூக விரோதிகள் சிலர் வதந்தியை கிளப்பி, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இதனால், படிப்பறிவற்ற நரிக்குற வர் இன பெற்றோரும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் வழக்கறிஞர் வீ.கருப்பையா, நகரச் செயலாளர் வே.ரெங்கசாமி ஆகி யோர் கூறுகையில், “அரசுப் பணம் ரூ.7 லட்சம் அதிகாரிகள் அலட்சியத் தால் வீணாகி வருகிறது. இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளா மல் விட்டுள்ளனர்.
உடனே அங்கன் வாடி மையத்தை செயல்படுத்த வும் அங்கு அங்கன்வாடி பணியா ளர்கள் பணிக்கு வருவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நரிக்குறவர் இன மக்கள் பள்ளிக்குச் செல்லாமல், சிறுவயதி லேயே குலத்தொழில் செய்யும் நிலை உள்ளது. எனவே, அங்கன் வாடிக்கு குழந்தைகள் வந்தால், அதனை தொடர்ந்து தொடக்கப் பள்ளிக்கு செல்லும் நிலை உருவா கும். சமூக விரோதிகள் சிலர் பேய், ஆவி என பீதியை கிளப்பி விட்டுள்ள னர். எனவே, அதிகாரிகள் இந்த இடத்தை ஆய்வு செய்து, சுற்றிலும் புதர் போல் மண்டி கிடக்கும் கரு வேல முட்செடிகளை அகற்றி, அங்கன்வாடிக்கு மின் இணைப்பு, மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பொதுக் கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தர வேண்டும். தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பள்ளிக் கல்வித் துறை அமைச் சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழியை அழைத்து வந்து, இந்த செந்தமிழ் நகர் பகுதி மக்களுக்கு நேரடியாக பல்வேறு உதவிகளை செய்த போதிலும், அங்கன்வாடி கட்டிடம் பூட்டிக் கிடக்கும் விஷ யத்தை அவரது கவனத்திற்கு அதி காரிகள் கொண்டு செல்லவில்லை என தோன்றுகிறது. எனவே, இப் பகுதி நரிக்குறவர் இன மக்க ளுக்கு பயன்படும் வகையில், அங்கன்வாடி மையத்தை திறந்து செயல்படுத்த வேண்டும்” என தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வா கத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ள னர்.