districts

img

தமிழகத்தில் இன்று 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு

சேலம், அக். 14 - பருவ மழைக்கால நோய்களைத் தடுக்க தமிழகம் முழுவதும் செவ்வாயனறு ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பணிகள் துவக்க விழா மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியம் கலந்து கொண்டு புதிய பணிகளை துவக்கி வைத்தார்.

அப்போது, பேசிய அவர், இந்த ஆண்டில் மழை கூடுதலாக பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழையும் கூடுதலாக பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கையாக அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளனர். எந்த கிராமத்தில் ஒருவருக்கு காய்ச்சல் என்றால் உடனடியாக அங்கு மருத்துவமுகாம் நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் மழைக்கால சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம்கள் 1000 இடங்களில் நாளை நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போதைப்பொருள் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருவது குறித்தும் வலி மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்வதால் வலி மாத்திரையின் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவலின் அடிப்படையில் தற்போது கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.