districts

போலீஸ் எழுத்துத் தேர்வுக்கு சென்ற இளைஞர் விபத்தில் பலி

சேலம், டிச.13- சேலத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வு எழுத சென்ற இளைஞர் லாரி மோதி விபத்தில் உயிரி ழந்தார்.  சேலம் மாவட்டம், ராம லிங்காபுரம் ஏவிஎஸ் கல் லூரியில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத் துத் தேர்வானது ஞாயி றன்று காலை துவங்கியது. இங்கு ஓமலூர் அடுத்த தாதா புரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் பெரியண் ணன் (25) என்பவர் தேர்வு எழுத இரு சக்கர வாக னத்தில் சென்றுள்ளார். அப்போது கல்லூரி அருகே சென்றபோது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதிய தில் பெரியண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அம்மா பேட்டை காவல் துறையி னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.