சேலம், அக்.9- நீட் தேர்வில் குறைந்த மதிப் பெண் பெற்றதால், மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைக்காத சோகத்தில் சேலத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் ஏழை எளிய மாணவ, மாணவியர்களின் மருத்துவப்படிப்பு கேள்விக்குறியாக உள்ளது.இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினரும் மாணவர் சங்கத்தினரும் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். நீட் தேர்வில் தோல்வியடைந்தவர்களின் தற்கொலைச்சம்பவங்களும் தொடர்கதையாக உள்ளது.இவ்வளவுக்குப் பிறகும் ஒன்றிய பாஜக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்து, பிடிவாதமாக உள்ளது.இந்நிலையில் சேலத்தில் ஒரு மாணவியின் தற்கொலை நிகழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள குப்பதாசன்வளவு பகுதியைச் சேர்ந்த வர் செந்தில்குமார். இவரது மனைவி ஆனந்தி. செந்தில்குமார் கடந்த சில வரு டங்களுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், அவரது மனைவி கொங்கணாபுரம் பகுதி யில் உள்ள தனியார் பள்ளியில் உதவியாள ராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதி யருக்குகு அகிலா (20) மற்றும் புனிதா (19) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் அகிலா பட்டப்படிப்பு படித்து வரு கிறார். புனிதா 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில் 12 ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றார். ‘மருத்துவ ராக வேண்டும்’ என்ற கனவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த மருத்துவ கலந்தாய்வில், நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் புனிதாவிற்கு மருத்துவப்படிப்புக்கு இடம் கிடைக்க வில்லை. இதனையடுத்து புனிதா பாரா மெடிக்கல் மருத்துவ படிப்பிற்கான கலந்தா ய்வில் பங்கேற்றார். இதிலும் மாணவி புனிதா விற்கு அரசு ஒதுக்கீட்டிற்கான இடம் கிடைக்காத நிலையில், மனமுடைந்த அவர் செவ்வாயன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடப்பாடி காவல் துறையினர், புனிதாவின் உடலை மீட்டு சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவி புனிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மருத்துவ இடம் கிடைக்காத மாணவி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.