வெள்ளி, பிப்ரவரி 26, 2021

districts

img

உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

சேலம்,ஜன.24- உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் விழிப் புணர்வு ஓட்டத்தை மேற்கொண்டுள்ள கடற்படை வீரர் ள் சேலத்திற்கு வருகை புரிந்தனர்.

உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யிலான விழிப்புணர்வு ஓட்டத்தை ராம் ரத்தன் மற்றும் சஞ்சய் குமார் ஆகிய இரு கடற்படை வீரர்கள் துவக்கியுள் ளனர். தேசிய இளைஞர் தினமான ஜனவரி 12 ஆம் தேதி  கன்னியாகுமரியில் இந்த ஓட்டத்தை துவங்கிய அவர்கள்,  தேசிய பெண்கள் தினமான மார்ச் 8ஆம் தேதி காஷ்மீரில் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இவர்கள் வெள்ளி யன்று சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியில் தனது மாரத் தான் ஓட்டத்தை தொடர்ந்தனர். மொத்தம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான 4431 கிலோ மீட்டர் தூரத்தை இவர்கள் கடக்க உள்ளனர்.

;