வியாழன், ஜனவரி 28, 2021

districts

ஏர்மேன் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு

சேலம், நவ.27- இந்திய விமானப்படை யில் பணிபுரிவதற்கு ஆள் சேர்ப்பு முகாம் டிச.10  முதல் 19 ஆம் தேதி வரை புதுச் சேரி, இந்திரா காந்தி விளை யாட்டு அரங்கில் நடைபெற வுள்ளது. இம்முகாமில் பங் கேற்க www.airmen selection.cdac.in என்ற இணையதளத்தில் நவ.28 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், இப்பணிக்கான எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர் வில் தேர்ச்சி பெற சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தின் மூல மாக இணையம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.  எனவே தகுதியும், விருப்ப மும் உள்ள மாணவர்கள் நேரிலோ (அ) தொலை பேசி மூலமாகவோ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளு மாறு சேலம் மாவட்ட ஆட்சி யர் சி.அ.ராமன் தெரிவித் துள்ளார்.

;